கடந்த செப்டம்பர் 2019 காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி வெறும் 4.5% என்கிற நெகட்டிவ் செய்தி தீ போல பரவிக் கொண்டு இருக்கிறது. ஆனால் சந்தை முதலீட்டாளர்களும் சரி, வர்த்தகர்களும் சரி, அதை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. சந்தை இன்றும் சாதாரணமாக வர்த்தகம் ஆகிக் கொண்டு இருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ் 40,793 புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 41,072 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,093 என்கிற உச்ச புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. வெள்ளிக்கிழமை குளோசிங் புள்ளியை விட, சுமார் 300 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

அதே போல நிஃப்டி கடந்த வெள்ளிக்கிழமை மாலை 12,056 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 12,137 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 12,137 என்கிற உச்ச புள்ளியைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட சுமார் 81 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
ஆனால் சந்தை மெல்ல தன் ஏற்றத்தின் வேகம் குறைந்து, இறக்கம் காண இருப்பதாகவும் தெரிகிறது. எனவே ஏற்றம் நிலைப்பது சந்தேகமே.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 10 பங்குகள் ஏற்றத்திலும், 20 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. பி.எஸ்.இ-யில் 2,474 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. அதில் 912 பங்குகள் ஏற்றத்திலும், 1,377 பங்குகள் இறக்கத்திலும், 185 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மொத்தம் 2,474 பங்குகளில் 44 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 214 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.
ஏர்டெல், க்ராசிம், ஜே எஸ் டபிள்யூ ஸ்ட்டில், ரிலையன்ஸ், பார்தி இன்ஃப்ராடெல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. டெக் மஹிந்திரா, யெஸ் பேங்க், பஜாஜ் ஃபனான்ஸ், ஈஷர் மோட்டார்ஸ், ஓ என் ஜி சி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.76 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 61.12 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications