அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்க பொருட்களுக்கு அதிகம் வரி விதிக்கும் நாடுகளுக்கு அதேபோல் பரஸ்பரி விதிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். இந்த பரஸ்பர வரி விதிப்பு ஏப்ரல் 2ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்து இருந்தார்.
டிரம்பின் இந்த வரி மிரட்டலால் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன. மேலும், பரஸ்பர வரிக்கான காலக்கெடு நெருங்க நெருங்க பங்குச் சந்தைகள் நிலையில்லாமல் இருந்தது. குறிப்பாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்திய பங்குச் சந்தைகள் பலத்த அடி வாங்கின. இருப்பினும், டிரம்ப் எதிர்பார்த்ததை காட்டிலும் குறைவாக வரி விதிக்க வாய்ப்புள்ளதாக என்ற பேச்சு எழுந்தது. இதனால் நேற்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நிலையாக இருந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் நேற்று பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். மேலும், இந்தியா மிக, மிக, மிக கடினமானது, மிக மிக கடினமானது. பிரதமர் இப்போதுதான் அமெரிக்காவுக்கு வந்து சென்றார், அவர் எனக்கு மிகவும் பிடித்த நண்பர். நான் சொன்னேன், நீங்கள் என்னுடைய நண்பர், ஆனால் நீங்கள் எங்களை சரியாக நடத்தவில்லை. இந்தியா அமெரிக்காவிடம் 52 சதவீதம் (வரி) வசூலிக்கிறார்கள் என்றார்.
அமெரிக்காவின் இந்த பரஸ்பர வரி விதிப்பு இம்மாதம் 9ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது வர்த்தக கூட்டாளிகள் அனைவருக்கும் பரஸ்பர வரி விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் (20 சதவீதம்), ஜப்பான் (24 சதவீதம்) மற்றும் தென்கொரியா (25 சதவீதம்) ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியை காட்டிலும் இந்தியாவுக்கு அதிகமாக வரி அமெரிக்கா வரி விதித்துள்ளது. டிரம்பின் வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் டிரம்பின் நடவடிக்கை இந்திய அரசாங்கத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
பரஸ்பர வரி விதிப்பு எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. மும்பை பஙகுச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. வர்ததகத்தின் இடையே சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டிசிஎஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் டெக் மகிந்திரா உள்பட 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேசமயம் சன் பார்மா, டைட்டன் மற்றும் பவர் கிரிட் உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. பங்குச் சந்தையின் சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்தனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!



Click it and Unblock the Notifications