இந்திய பங்குச் சந்தை திங்கட்கிழமை மீண்டும் பெரும் சரிவை சந்தித்தது தற்போது மீண்டு வருகிறது. உள்நாட்டில் பொருளாதார மந்தநிலை முதலீட்டு சந்தை வாட்டி வதைத்து வரும் வேளையில் சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் இந்திய சந்தையில் இருந்து முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர்.
இதன் வாயிலாக இன்று பங்குச்சந்தையில் முதல் பாதி வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்து 82,861 என்ற அளவுக்கு சென்றது. இதேபோல் நிப்டி 50 குறியீடு 150 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 25,500-ஐ கீழே தொட்டது. இதன் மூலம் கடந்த 6 நாட்களில் பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.18.55 லட்சம் கோடி குறைந்துள்ளது என கணக்கிடப்பட்டு உள்ளது.

ஜனவரி 12ஆம் தேதி வர்த்தகம்
இன்று காலையில் சென்செக்ஸ் குறியீடு 83,435.31 புள்ளிகளில் துவங்கி 82,861.07 புள்ளிகள் வரையில் சரிந்தது. ஆனால் தற்போது சற்றும் எதிர்பாராத விதமாக மொத்த சரிவில் இருந்து மீண்டு 70 புள்ளிகள் உயர்வில் 83,711.93 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதுவே நிஃப்டி குறியீடு 25,669.05 புள்ளிகளில் வர்த்தகத்தை துவங்கி 25,473.40 புள்ளிகள் வரையில் சரிந்தது. தற்போது நிஃப்டி 0.14 சதவீதம் மட்டும் உயர்ந்து 25,681.60 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
ஜனவரி 2 முதல் தொடர் வீழ்ச்சி
ஜனவரி 2 அன்று சென்செக்ஸ் 85,762 என்ற உச்சத்தை எட்டியது மூலம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் குத்தாட்டம் போட்டனர், ஆனால் அதன் பிறகு 2,903 புள்ளிகளுக்கு மேல் சரிந்து தற்போது 82,864-ஐ தொட்டுள்ளது. நிப்டி குறியீடும் இதே காலகட்டத்தில் சுமார் 3.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து 25,473 என்ற குறைந்த அளவை பதிவு செய்தது.
சந்தை இழப்பின் அளவு
ஜனவரி 2ஆம் தேதிக்கு பின்பு ஏற்பட்ட சரிவின் மூலம் பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.18.55 லட்சம் கோடி குறைந்து தற்போது ரூ.462.68 லட்சம் கோடியாக உள்ளது. இந்த வீழ்ச்சி முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சரிவுக்கு முக்கியமான 5 காரணங்கள் உள்ளது.
டிரம்ப் வரி & அமெரிக்கா-இந்திய வர்த்தக பிரச்சனை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளின் மீது 500 சதவீதம் என்ற அதிகப்படியான வரி விதிக்கலாம் என்று பேசி வருகிறார். இதனால் இந்தியாவுடனான வர்த்தகம் பாதிக்கப்படலாம் என்ற முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. இதேவேளையில் இந்தியா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தகம் ஒப்பந்தத்திலும் தெளிவின்மை நிலவுகிறது.
புவிசார் அரசியல் பதற்றம்
டிரம்ப் தலைமையிலான அரசு வெனிசுலா-வை கைப்பற்றிய நிலையில் அடுத்தடுத்து கிரீன்லாந்து, மெக்சிகோ, கியூபா போன்ற நாடுகளை கைப்பற்றுவதற்கு திட்டமிட்டு வருவதாக தொடர்ந்து அறிவித்து வருகிறார். இதில் கிரீன்லாந்து நாட்டை வாங்குவதை காட்டிலும் ராணுவத்தை இறக்கி மொத்தமாக கைப்பற்றுவதில் தான் குறியாக இருப்பதாக சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதற்கு NATO அமைப்பில் இருக்கும் நாடுகள் அமெரிக்காவுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. இதனால் முதலீட்டு சந்தையில் சலசலப்பு ஏற்பட துவங்கியுள்ளது.
FII தொடர்ந்து விற்பனை
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors) தொடர்ந்து இந்திய பங்குகளை விற்று வருகின்றனர். அவர்கள் பணத்தை வெளியே எடுத்துச் செல்வதால் பங்கு விலை கீழே செல்கிறது. வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 3700 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
உலக சந்தைகளில் பலவீனம்
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய சந்தைகள் எல்லாம் இப்போது பலவீனமாக உள்ளன. உலக அளவில் பொருளாதாரத்தில் நம்பிக்கை குறைந்துள்ளது. இதனால் இந்திய சந்தையும் பாதிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் சப்ளையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த துவங்கியிருக்கும் காரணத்தால் மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் உலக நாடுகளுக்கு இது பெரும் பின்னடைவாக உள்ளது. இதனால் விலைவாசி உயரும் அபாயம் உருவாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
வெனிசுலா-வை அமெரிக்கா கைப்பற்றியது, ரஷ்ய கச்சா எண்ணெய் மீது கடுமையான கட்டுப்பாடுகள், 500 சதவீத வரி உயர்வு ஆகியவை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தி வருகிறது. இந்தியா அதிக அளவு எண்ணெயை இறக்குமதி செய்கிறது, இந்தியா வாங்கு எண்ணெய்க்கு பிரெண்ட் ஆயில் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 0.02 டாலர் உயர்ந்து 63.36 டாலராக உள்ளது.
இந்த 5 காரணங்கள் சேர்ந்து இன்று சந்தை பெரிய சரிவை சந்திக்க காரணமாக இருந்தாலும், மதிய நேர வர்த்தகத்தில் சந்தை மேம்பட உள்நாட்டு ரீடைல் முதலீட்டாளர்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications