இந்திய பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை கடுமையான சரிவை சந்தித்தது ரத்தகளறியானது. இன்று காலை நேரத்தில் தொடங்கிய விற்பனை அழுத்தம் பிற்பகலில் தீவிரமடைந்து, மாலையில் தீவிரமடைந்து பெரும் சரிவை பதிவு செய்து மூன்று மாத குறைந்த அளவுக்கு இழுத்துச் சென்றது.
இன்றைய வர்த்தக முடிவில் BSE சென்செக்ஸ் 1,065.7 புள்ளிகள் (1.28%) குறைந்து 82,180.47-ஆக முடிந்தது. NSE நிப்டி 50 353 புள்ளிகள் (1.38%) இழந்து 25,232.50-ஆக குறைந்தது. சென்செக்ஸ் அதிகப்படியாக 82,010.58 புள்ளிகள் வரையிலும், நிஃப்டி 25,171.35 புள்ளிகள் வரையிலும் சரிந்தது.

இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் பங்கு மதிப்பு 9.46 லட்சம் கோடி ரூபாய் குறைந்து 455.7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் போதுமான அளவுக்கு நிதியை உட்செலுத்தாத நிலையில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியான சரிவு சந்துள்ளது. இன்றைய சரிவுக்கு 5 முக்கியமான காரணங்கள் உள்ளதாக முதலீட்டு சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்றைய வர்த்தகத்தில் ஐடி பங்குகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. நிப்டி ஐடி குறியீடு 2.1% சரிந்து நாளின் மோசமான துறையாக மாறியது. அனைத்து ஐடி பங்குகளும் சரிவில் முடிந்தன. விப்ரோ கிட்டத்தட்ட 3% சரிந்தது, LTIMindtree 7% வீழ்ச்சியடைந்தது. புதிய தொழிலாளர் சட்டங்கள் மூலம் ஏற்பட்ட நிதி இழப்பு ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மோசமாக முடிந்தது. இதை தொடர்ந்து உலக நாடுகளின் மந்தமான பொருளாதார வளர்ச்சி, வர்த்தக பாதிப்புகள், வரி விதிப்பு ஆகியவை ஐடி துறை வர்த்தகத்தை பாதிக்கும் என்ற கருத்து உள்ளது.
உலக அளவிலான பதற்றம் பங்கு சந்தை முதலீட்டை குறைத்துள்ளது. டிரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு அச்சுறுத்தல் விடுத்ததால் ஆசிய-பசிபிக் பங்குகள் (ஜப்பான் தவிர) 0.3% சரிந்தன. இது இந்திய சந்தையிலும் எதிரொலித்தது.
மேலும் இந்திய சந்தையில் இருந்து வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் (FIIs) தொடர்ந்து பங்குகளையும், முதலீடுகளையும் விற்று வருகின்றன. ஜனவரி 19 அன்று 3,263 கோடி பங்குகளை விற்றனர், இன்றும் அதிகப்படியான முதலீடுகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் FII முதலீட்டாளர்களின் முதலீடு 10-வது நாளாக தொடர்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் உள்நாட்டு முதலீட்டாளர்களும் சரி, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சரி பாதுகாப்பான சொத்துகளுக்கு பணத்தை முதலீட்டாளர்கள் திரும்பியுள்ளனர். இதன் எதிரொலியாக இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை 2 முறை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்சையில் தங்கம் ஒரு அவுன்ஸ்க்கு 4,700 டாலர் அளவை முதல் முறையாக தாண்டியது. இதேபோல் வெள்ளி, பிளாட்டினம், பாலேடியம் ஆகியவையும் உயர்ந்தன.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications