சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டு. புதிய உச்சத்தினை இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளிலும் பெற்றுள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கிக்கான புதிய கவர்னர் நாமினேஷன், உலகச் சந்தையில் பங்குகளை வாங்கும் மூடில் முதலீட்டாளர்கள் போன்ற காரணங்களினால் பங்கு சந்தை இன்று உயர்வைச் சந்தித்தது.
இன்றைய நிலை
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 112.34 புள்ளிகள் என 0.33 சதவீதம் வரை உயர்ந்து 33,685.56 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. தேசிய பங்கு சந்தை குறியீடான னிப்டி 28.70 புள்ளிகள் என 0.28 சதவீதம் உயர்ந்து 10,452.50 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
துறை சார்ந்த பங்குகளின் நிலை
கேப்பிட்டல் கூட்ஸ் துறை சார்ந்த பங்குகள் 1.09 சதவீதம், வங்கி துறை பங்குகள் 1.00 சதவீதம், பொதுத் துறை நிறுவனப் பங்குகள் 0.64 சதவீதம், ரியாலிட்டி துறை பங்குகள் 0.37 சதவீதம் என யர்வை அளித்தன. அதே நேரம் ஹெல்த்கேர் துறை பங்குகள் 0.56 சதவீதமும், பவர் துறை பங்குகள் 0.35 சதவீதமும், எண்ணெய் மற்றும் கேஸ் நிறுவனப் பங்குகள் 0.16 சதவீதம் மற்றும் மெட்டல் துறை பங்குகள் 0.13 சதவீதம் என நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் அடைந்தவர்கள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (+ 3.19%), டாட்டா மோட்டார்ஸ் (+ 2.78%), எல் அண்ட் டி (+ 1.98%), ஆக்சிஸ் வங்கி (+ 1.87%) மற்றும் ஓஎன்ஜிசி (+ 1.78%)
நட்டம் அடைந்தவர்கள்
பவர் கிரிட்டு (-2.05%), சன் பார்மா (-1.95%), கோல் இந்தியா (-1.73%), ஹீரோ மோட்டோகார்ப் (-1.23%) மற்றும் லுபின் (-1.1%)


Click it and Unblock the Notifications