அமெரிக்க அரசின் 50% வரி விதிப்பு நடவடிக்கை, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குகளை விற்பனை செய்வது வெளியேறுவது, உலக பொருளாதார சூழல் என தொடர்ச்சியாக இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் தான் இருக்கின்றன. இந்த சூழலில் செப்டம்பர் மாத முதல் வாரத்தில் பங்குச்சந்தைகள் மீண்டு வருமா என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தியப் பங்குச் சந்தைகள் பொறுத்தவரை இந்த வாரம் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை எதிர் நோக்கி இருக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், பொருளாதாரத் தரவுகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் ஆகியவை சந்தை போக்கை தீர்மானிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய ஜிடிபி முதல் காலாண்டில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அரசு மூலதன செலவினங்களை அதிகரித்தது மற்றும் கட்டுமான துறை வேளாண் துறை செயல்பாடுகளால் முதல் காலாண்டில் இந்தியா 7.8% வளர்ச்சி பெற்றுள்ளது. இது பங்குச்சந்தைகள் மீண்டு வர உதவியாக இருக்கும் என ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட்டின் ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் வினோத் நாயர் கூறுகிறார்.இருப்பினும், அமெரிக்கா உடனான வர்த்தக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சந்தைக்கு முக்கிய உந்துசக்தியாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த வாரம் முதலீட்டாளர்கள் வாகன விற்பனைத் தரவுகள், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டும் என்றும் இவற்றின் வெளியீடுகள் அடிப்படையில் சந்தையின் போக்கில் மாற்றம் ஏற்படும் என்றும் கூறுகிறார் ரெலிகேர் ப்ரோக்கிங் லிமிடெட்டின் ஆராய்ச்சிப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் அஜீத் மிஸ்ரா.
மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் சித்தார்த்தா கெம்கா, செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்மொழியப்படும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்கிறார்.
மேலும், வெள்ளிக்கிழமை சந்தை நேரம் முடிந்தபின் வெளியான இந்தியாவின் ஜிடிபி தரவுகளுக்கு திங்கட்கிழமை சந்தைகள் எதிர்வினையாற்றும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த வாரம், சென்செக்ஸ் 1,497.2 புள்ளிகள் (1.84%) சரிந்தது, நிஃப்டி 443.25 புள்ளிகள் (1.78%) சரிந்தது. அமெரிக்க வரிகள் இந்திய ஏற்றுமதிகள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கவலைகள் சந்தையை மந்தமாக்கின.
எனவே செப்டம்பர் முதல் வாரத்தில் இந்திய பங்குச்சந்தை அமெரிக்க வரி விதிப்பை கடந்து இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி, இந்தியா சீனா உறவு, வாகன விற்பனை தரவு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்படும் , எனவே முதலீட்டாளர்கள் இந்த தரவுகளில் கவனம் செலுத்தி அதற்கேற்ப முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications