வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சந்தை இன்று மீண்டும் ஏற்றத்தில் காணப்படுகிறது.
எனினும் இன்று ப்ரீ ஒபனிங் சந்தையில், சந்தை சற்று சரிவில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் பெரியளவில் மாற்றமின்றி 41.14 புள்ளிகள் குறைந்து, 51,490.38 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 2.70புள்ளிகள் குறைந்து, 15,170.600 புள்ளிகள் ஆகவும் காணப்பட்டது.

இதற்கிடையில் சந்தையின் தொடக்கத்தில் சற்று ஏற்றத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் 37.13 புள்ளிகள் அதிகரித்து, 51,568.65 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்து, 15,185.30 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது. இதில் 787 பங்குகள் ஏற்றத்திலும், 291 பங்குகள் சரிவிலும், இதே 67 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் நிஃப்டி பிஎஸ்இ, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ எஃப்எம்சிஜி, பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகிறது. மற்றவை சற்றே ஏற்றத்தில் காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, கிரசிம், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஐடிசி, கோல் இந்தியா, ஒஎன்ஜிசி, சன் பார்மா, கெயில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஐடிசி, ஓஎன்ஜிசி, சன் பார்மா, பார்தி ஏர்டெல், என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படுகின்றன. அதன் எதிரொலியாக சில தினங்களாகவே இந்திய சந்தையும் ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. குறிப்பாக பரவி வரும் புதிய வகை கொரோனாக்கள், தடுப்பூசி, பட்ஜெட் எதிரொலி, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் எதிரொலி, எண்ணெய் விலை அதிகரிப்பு, அமெரிக்க சந்தை என பலவும் இந்திய சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 46.13 புள்ளிகள் அதிகரித்து, 51,577.02 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 10.50 புள்ளிகள் அதிகரித்து, 15,183 ஆகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications