நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் அதிகளவிலான ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இது வாரத்தின் இறுதி வர்த்தக நாள் என்பதால், சந்தையில் புராபிட் புக்கிங்காக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் உள்ள சாதகமான காரணிகளுக்கு மத்தியில், முந்தைய அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. எனினும் அன்னிய முதலீடுகள் வெளியேற்றமும் சற்று அதிகரித்துள்ளது.
எப்படியிருப்பினும் இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தாக்கம் என்பது, சந்தைக்கு மிக சாதகமான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 199.40 புள்ளிகள் அதிகரித்து, 52,898.40 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 23 புள்ளிகள் அதிகரித்து, 15,813.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 145.80 புள்ளிகள் அதிகரித்து, 52,844.80 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 49.50 புள்ளிகள் அதிகரித்து, 15,840 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1359 பங்குகள் ஏற்றத்திலும், 493 பங்குகள் சரிவிலும், 66 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் கூட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஆயில் & கேஸ் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்றவை சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும், பெரியளவில் ஏற்றம் காணவில்லை.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டெக் மகேந்திரா, ஜே.எஸ்.டபள்யூ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ரிலையன்ஸ், ஹெச்.யு.எல், ஏசியன் பெயிண்ட்ஸ், யுபிஎல், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.சி.எல் டெக், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, ரிலையன்ஸ், ஹெச்.யு.எல், ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மகேந்திரா, என்.டி.பி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.
ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.14 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் முடிவு விலையானது 74.16 ரூபாயாக இருந்தது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 40.87 புள்ளிகள் குறைந்து, 52,649.62 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 4.55 புள்ளிகள் குறைந்து, 15,785.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications