மும்பை: இந்திய பங்கு சந்தையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்று சற்றே ஏற்றத்தில் காணப்படுகின்றது. கடந்த சில அமர்வுகளாகவே சந்தையானது சரிவில் காணப்பட்ட நிலையில், இன்று குறைந்த விலையில் பங்குகளை வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இன்று காலை தொடக்கத்தில் சற்றே ஏற்றத்தில் சந்தையானது காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 242.82 புள்ளிகள் அல்லது 0.42% அதிகரித்து, 57,871.77 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 69.40 புள்ளிகள் அல்லது 0.41% அதிகரித்து, 17,057.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1330 பங்குகள் ஏற்றம் கண்டும், 454 பங்குகள் சரிவினைக் கண்டும், 79 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
ரூபாயின் மதிப்பு?
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று 9 பைசா அதிகரித்து, 82.54 ரூபாயாக சற்றே உயர்ந்து காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் 82.63 ரூபாயாக காணப்படுகின்றது.
இந்தியாவின் பொருளாதாரம் என்பது நடப்பு நிதியாண்டில் 7% வளர்ச்சி காணலாம் என்றாலும், சில்லறை பணவீக்கம் என்பது தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறியீடுகள்
இன்று சந்தையில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. எனினும் பிஎஸ்இ டெக், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, நிஃப்டி ஐடி உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. எனினும் மற்ற குறியீடுகள் பச்சை நிறத்தில் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி லைஃப், பஜாஜ் பைனான்ஸ், லார்சன், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பவர் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா, ஐடிசி, ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ், லார்சன், டைட்டன் நிறுவனம், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பவர் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா, ஐடிசி, ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
இன்று தொடக்கத்திலேயே பலத்த சரிவில் காணப்பட்ட சந்தை, தற்போது 10.29 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 337.1 புள்ளிகள் அதிகரித்து அல்லது 0.58% அதிகரித்து, 57,966.05 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 92.8 புள்ளிகள் அல்லது 0.55% அதிகரித்து, 17,081.20 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications