நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளின் ஒன்று இண்டஸ்இந்த் வங்கி. அண்மையில் இந்த வங்கியில் சில முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. 2024-25ம் நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் வட்டி வருமானமாக ரூ.674 கோடி தவறுதலாக பதிவு செய்யப்பட்டதாக வங்கி அண்மையில் தெரிவித்தது. கடந்த மார்ச் 10ம் தேதியன்று அதன்டேரிவேடிவ் போர்ட்ஃபோலியாவில் முறைகேடுகள் நடந்ததை ஒப்புக்கொண்டது.
சர்ச்சை
இது கடந்த டிசம்பர் 31 நிலவரப்படி, அதன் நிகர மதிப்பில் 2.35 சதவீதத்தை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளியான சில எதிர்மறையான தகவல்களால் அந்த வங்கி சர்ச்சையில் சிக்கியது. இந்த சூழ்நிலையில், இண்டஸ்இந்த் வங்கி தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் இண்டஸ்இந்த் வங்கி எப்படியும் ரூ.304 கோடி நஷ்டத்தை சந்திக்கும் என்று நிபுணர்கள் மதிப்பீட்டு இருந்தனர்.

ஆனால், நினைத்தை காட்டிலும் இண்டஸ்இந்த் வங்கியின் மார்ச் காலாண்டு நிலை முடிவுகள் மிகவும் மோசமாக இருந்தது. இண்டஸ்இந்த் வங்கி 2025 மார்ச் காலாண்டில் ரூ.2,328.92 கோடியை நிகர இழப்பாக சந்தித்துள்ளது. 2024 மார்ச் காலாண்டில் இந்த வங்கிக்கு ரூ.2,349 கோடி லாபம் கிடைத்து இருந்தது.
கணக்கியல் முரண்பாடுகள்
கடந்த வாரம் நடைபெற்ற வங்கியின் உள்தணிக்கைகளில், ரூ.674 கோடி மற்றும் ரூ.595 கோடி மதிப்புள்ள வட்டி வருமானத்தில் இரண்டு புதிய கணக்கியல் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை மார்ச் காலாண்டு முடிவுகளிலும் பிரதிபலிக்கின்றன. இண்டஸ்இந்த் வங்கி 19 ஆண்டுகளில் (2006 மார்ச் முதல்) முதல் முறையாக 2025 மாா்ச் காலண்டில்தான் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில் இண்டஸ்இந்த் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.3,048.3 கோடியாக உள்ளது. ஒதுக்கீடு ரூ.2,522.08 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் ரூ.1,743.63 கோடியாக இருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் இந்த வங்கியின் மொத்த வாராக் கடன் 3.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 1.92 சதவீதமாக இருந்தது.
சில ஊழியர்கள்
இண்டஸ்இந்த் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், வங்கிக்கு எதிராக மோசடி நடந்திருக்கலாம், வங்கியின் கணக்கியல் மற்றும் நிதி அறிக்கையிடலில் குறிப்பிடத்தக்க பங்கை கொண்ட சில ஊழியர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம். இது வங்கியின் நிதி நிலை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வங்கியின் இயக்குனர்கள் குழு சந்தேகிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இண்டஸ்இந்த் வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.39 சதவீதம் குறைந்து ரூ.771.10ல் முடிவுற்றது. வங்கியின் மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் மோசமாக அமைந்துள்ளதால், அதன் தாக்கம் இன்றைய பங்கு வர்த்தகத்தில் இண்டஸ்இந்த் பங்கின் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமு் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் களைகட்டும் ஐபிஓ சந்தை.. செபியிடம் மலை போல் குவியும் ஐபிஓ ஆவணங்கள்..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications