இந்திய பங்குச் சந்தைகளுக்கு 2024ம் ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக அமைந்தது. கடந்த செப்டம்பரில் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. பங்குச் சந்தைகள் எழுச்சியாக இருந்ததால் அந்த ஆண்டில் புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) சிறப்பாக இருந்தது. கடந்த 2024ம் ஆண்டில் மொத்தம் 91 நிறுவனங்கள் ஐபிஓ வாயிலாக சுமார் ரூ.1.60 லட்சம் கோடி திரட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் முதல் கடந்த மார்ச் வரையிலான 6 மாதங்கள் பங்குச் சந்தைகள் தொடர் சரிவை சந்தித்தன.
10 நிறுவனங்கள்
இதனால் ஐபிஓ மந்தமானது. இந்த ஆண்டு ஏப்ரல் வரை, 10 நிறுவனங்கள் மட்டுமே பிரதான ஐபிஓ மூலம் ரூ.18,704 கோடி திரட்டின. இருப்பினும், இந்த ஆண்டில் இதுவரை, 75க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஐபிஓவுக்கு ஒப்புதல் வேண்டி செபியிடம ஆவணங்களை தாக்கல் செய்துள்ளன. பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியின் தரவுகளின்படி, 2025ம் ஆண்டில் இன்றுவரை முதல் 5 மாதங்களில் 75க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஐபிஓ ஆவணங்களை தாக்கல் செய்துள்ளன.

ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்த எண்ணிக்கை 150 முதல் 200 வரை உயரும் என்று மெர்ச்சன்ட் பேங்கர்ஸ் எதிர்பார்க்கின்றனர். மெர்ச்சன்ட் பேங்கர்ஸின் தொழில்முறை அமைப்பான இந்திய முதலீட்டு வங்கியாளர்கள் சங்கத்தின் (ஏஐபிஐ) தலைவர் மகாவீர் லூனாவத் கூறுகையில், ஐபிஓ சந்தை விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓப்பீட்டளவில் எச்சரிக்கையான காலத்துக்கு பிறகு வேகம் சீராக அதிகரிக்கும்.
பணப்புழக்க நிலை
அடுத்த 5 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஐபிஓ ஆவணங்களை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். பொதுச் சந்தையை பயன்படுத்த தயாராக உள்ள நிறுவனங்களின் வலுவான வரிசையை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார். பன்டோமத் கேபிட்டல் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லுனாவத் கூறுகையில், இந்த எழுச்சி வளர்ந்து வரும் புரோமோட்டர்களின் நம்பிக்கை, ஆழமடைந்து வரும் உள்நாட்டு பணப்புழக்க நிலை மற்றும் ஆதரவான பொருளாதார சூழலைக் குறிக்கிறது
பொது சந்தைகள் வழங்கும் பணப்புழக்கம் மற்றும் மதிப்பீட்டு நன்மைகளை பயன்படுத்தி கொள்வதை வணிகங்கள் நோக்கமாக கொண்டிருப்பதால், தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொறியியல், மருந்து, உற்பத்தி மற்றும் நுகர்வோர் சேவைகள் போன்ற முக்கிய துறைகள் முன்னணியில் இருக்கும். இந்த போக்கு தொடர்ந்தால், சமீபத்திய நினைவுகளில் மிகவும்சுறுசுறுப்பான ஐபிஓ கட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.
செபி
பிரைம் டேட்டாபேஸின் தரவுகளின்படி, ஏற்கனவே செபியின் ஒப்புதல் பெற்ற சுமார் 70 நிறுவனங்கள் தங்கள் ஐபிஓக்களை மேற்கொள்ள எந்த நேரத்திலும் சந்தைக்கு வரக்கூடும். கடந்த இரண்டு மாதங்களாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து மீண்டு வந்த வண்ணம் உள்ளன. பங்குச் சந்தைகள் நிலவரம் தொடர்ந்து இதேபோன்ற நேர்மறையாக இருந்தால், செபியிடம் ஏற்கனவே அனுமதி பெற்ற நிறுவனங்கள் ஐபிஓவை விரைவாக மேற்கொள்ளும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த நம்பிக்கை.. 50% வரை உயர்ந்த டிரோன் பங்குகள்..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications