நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்று இண்டஸ்இந்த் வங்கி. பங்குச் சந்தையில் கடந்த சில வர்த்தக தினங்களாக தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. இண்டஸ்இந்த் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சுமந்த் கத்பாலியாவின் பதவி காலத்தை ஓராண்டு மட்டுமே நீட்டிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது. இண்டஸ்இந்த் வங்கியின் இயக்குனர்கள் குழு, வங்கியின் தலைமை அதிகாரி சுமந்த் கத்பாலியாவின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீடிக்க அனுமதி வேண்டி இந்திய ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம் செய்தது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, இண்டஸ்இந்த் வங்கி தொடர்பான மூலோபாய தன்மை மற்றும் சாத்தியமான மேலாண்மை மாற்றம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இது இது இண்டஸ்இந்த் வங்கி முதலீட்டாளர்களின் உணர்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் இண்டஸ்இந்த் வங்கி பங்கின் விலையில் எதிரொலித்தது. இதனையடுத்து நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இண்டஸ்இந்த் வங்கி பங்கின் விலை 5 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டு ரூ.886.40ஆக குறைந்தது.

இந்த சூழ்நிலையில், இண்டஸ்இந்த் வங்கி கடந்த 10ம் தேதியன்று பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், இண்டஸ்இந்த் வங்கி அதன் டெரிவேடிவ் பரிவர்த்தனைகள் தொடர்பான சில கணக்கு இருப்புகளில் முரண்பாடுகளை கண்டறிந்ததாக தெரிவித்தது. இதனையடுத்து இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இண்டஸ்இந்த் வங்கியின் பங்கு விலை சுமார் 26 சதவீதம் குறைந்து புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.667க்கு சென்றது.
இந்திய ரிசர்வ் வங்கி 2023 செப்டம்பரில் பிறப்பித்த வங்கிகளுக்கான முதலீட்டு போர்ட்ஃபோலியாக்கள் குறித்த உத்தரவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக இண்டஸ்இந்த வங்கி தனது டெரிவேடிவ் போர்ட்ஃபோலியாவை மதிப்பீடு செய்தது. அப்போது அதன் நிகர மதிப்பில் 2.35 சதவீதம் குறைப்புக்கு வழிவகுக்கும் முரண்பாடுகளை கண்டறிந்தது. இந்த முரண்பாட்டைத்தான் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் இண்டஸ்இந்த வங்கி தெரிவித்தது.
கடந்த 6 மாதத்தில் இண்டஸ்இந்த் வங்கி பங்கு விலை 37 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது. கடந்த 4 வாரத்தில் மட்டும் இப்பங்கின் விலை 16 சதவீதம் குறைந்துள்ளது. இப்பங்கின் விலை தொடர்ந்து குறைந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Story Written : subramanian
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications