நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி. சேவை நிறுவனம் இன்போசிஸ். கடந்த சில காலாண்டுகளாக இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் இந்நிறுவன பங்கின் விலை சற்று தேக்க நிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில் அண்மையில் இன்போசிஸ் நிறுவனம் தனது 2023 டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது. இது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்ததால் இன்போசிஸ் நிறுவன பங்கின் ஏற தொடங்கியது.

இன்போசிஸ் கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.6,552 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். அந்த காலாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.6,245 கோடி ஈட்டியிருந்தது.
இன்போசிஸ் லாபம் அதிகரிப்பு எதிரொலியாக வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் அந்நிறுவன பங்கின் விலை 7 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இன்போசிஸ் பங்கு விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,664.90ஐ எட்டியது.
இப்போது இந்நிறுவன பங்குகளில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்தால், இன்போசிஸ் பங்கு தனது இதுவரை இல்லாத உயர்ந்த விலையை எட்டினால் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? அதற்கு முன் இன்போசிஸ் பங்கின் அதிகபட்ச விலை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்க. 2022 ஜனவரி 19ம் தேதியன்று இன்போசிஸ் பங்கு விலை இதுவரை இல்லாத அளவான ரூ.1,939.50ஐ தொட்டது.
தற்போதைய இன்போசிஸ் பங்கின் விலை அடிப்படையில் நீங்கள் ரூ.10,000க்கு 6 பங்குகளை வாங்கலாம். அந்நிறுவன பங்கு இதுவரை இல்லாத உச்சவிலையை தொட்டால் உங்கள் முதலீடு சுமார் ரூ.12,000ஆக உயரும்.
இன்போசிஸ் பங்குகளை வாங்கலாம் என்றே பல முன்னணி ஆய்வு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன. ஜெப்ரிஸ் நிறுவனம் இன்போசிஸ் பங்குகளை வாங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. மேலும், இலக்கு விலையை ரூ.1,740ஆக நிர்ணயம் செய்துள்ளது.
கோடக் செக்யூரிட்டிஸ் பங்குகளை BUY என மதிப்பீடு செய்ததோடு, அதன் இலக்கு விலையை ரூ.1,800ஆக நிர்ணயம் செய்துள்ளது. மோதிலால் ஓஸ்வால் மற்றும் ஐடிபிஐ ஆகிய நிறுவனங்களும் இன்போசிஸ் பங்குகளை வாங்கலாம் என தெரிவித்துள்ளன. மேலும் இந்நிறுவனங்கள் இன்போசிஸ் பங்கின் இலக்கு விலையை முறையே ரூ.1,750 மற்றும் ரூ.1,730ஆக நிர்ணயம் செய்துள்ளன.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications