நாட்டு நடப்புகளை கவனத்தில் கொண்டு முறையாக திட்டமிட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை பெறுகின்றனர். இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டாலும், முதலீட்டாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக லாபத்தை தந்துக்கொண்டு தான் வருகிறது.
நடப்பாண்டில் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், இதனை கருத்தில் கொண்டு பங்குகளை தேர்வு செய்தால் நிச்சயம் உங்களுக்கு இது செல்வத்தை வாரி வழங்கும் ஆண்டாக அமையும். எந்தெந்த துறைகளில் முதலீடு செய்தால் லாபத்தை எதிர்பார்க்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பங்குச்சந்தை வளர்ச்சி எப்படி இருக்கும்?: மத்திய அரசின் நிதி நிர்வாகத்தின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் அண்மை காலங்களில் அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக பங்குச்சந்தைகள் ஏற்றத்திலேயே உள்ளன.
நிஃப்டியின் பிரைஸ் டூ இயர்னிங்ஸ் விகிதம் (PE ratio) 23ஆக உள்ளது. அதுவே 33 ஆண்டு கால சராசரி பிரைஸ் டூ இயர்னிங்ஸ் 25ஆக உள்ளது. இது நல்ல அறிகுறி என கூறும் நிபுணர்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3% என்ற வளர்ச்சி விகிதத்தில் இருப்பதால் முதலீடுகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சாதகமான அம்சங்கள்: மத்திய அரசு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக நிதி பற்றாக்குறையை வெற்றிகரமாக நிர்வகித்து வருவது சாதகமான அம்சம் என்கின்றனர் முதலீட்டாளர்கள். நடப்பு நிதி ஆண்டு முடியும் நிலையில் , அரசு 5.9% அல்லது அதற்கும் கீழ் நிதி பற்றாக்குறையை அடைய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
அதே போல அரசு, சந்தைகளில் கடன் வாங்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்றும் கணிக்கின்றனர். இதன் காரணமாக முதலீட்டாளர்களின் கவனம் இந்திய பங்குச்சந்தை மீது குவிந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
என்னென்ன துறைகளில் முதலீடு செய்யலாம்?: தற்போதைய சந்தையின் போது போக்கு , அரசின் திட்டங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நோக்கினால் பொறியியல் , ரியல் எஸ்டேட், மின்சாரம், சிறப்பு ரசாயனங்கள், செயற்கை நுண்ணறிவு,சோலார், பாதுகாப்பு, உலோகங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, யுபிஐ, வேளாண் தொழில்நுட்பம், சுற்றுலா, அழகு சாதன பொருட்கள் , சோலார் மற்றும் பேக்கேஜிங் ஆகிய துறைகளில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை அளிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
அதிகமாக கொள்முதல் செய்த வங்கிகள் மற்றும் மருந்து நிறுவனங்களில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஒரு பங்கினை தேர்வு செய்யும் போது அந்த நிறுவனம் நல்ல நிர்வாக அமைப்பை கொண்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
நிபுணர்கள் பரிந்துரைக்கும் பங்குகள் என்னென்ன?: பெல், ஆல்பைன் ஹவுசிங், டாடா பவர், டாடா மோட்டார்ஸ், அகார் ஆட்டோ, விபுல் ஆர்கானிக்ஸ், பிபிசிஎல், ஸோமாடோ, தாமஸ் குக், ஜிடிவி இன் ஜினியரிங் மற்றும் ஆர்டிபி ரசாயன் ஆகிய நிறுவன பங்குகள் உயரலாம் என சொல்லப்படுகிறது. பங்குச்சந்தை முதலீட்டுக்கு முன்பு நன்கு ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டுமென்ற எச்சரிக்கையையும் முன் வைக்கின்றனர்.
பொதுத்துறை நிறுவன பங்குகள்: அண்மை காலமாக பொதுத்துறை நிறுவன பங்குகளை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ரயில்வே துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றம் கண்டதே இதற்கு உதாரணம். அதே போல பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்பீடு 700 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. மக்கள் பொதுத்துறை நிறுவன பங்குகளை வாங்குவதை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என நம்பப்படுவதால் அவற்றிலும் முதலீடு செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications