சரியும் சந்தை சென்டிமென்ட் என்ன என்று தெரியுமா? மேலும் என்ன என்ன காரணங்களால் சந்தை சரிய இருக்கிறது என்று பாருங்களேன்.
திவான் ஹவுசிங் பிரச்னை
திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் திவால் ஆகிவிட்டதாகச் சொல்லப்பட்ட பிரச்னை மற்றும் ஐ.எல் & எஃப்.எஸ் நிறுவனத்தின் கடன் பிரச்னைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் செபி கவனித்துக் கொண்டிருப்பதாகவும், தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் சில தினங்களுக்கு முன் சொன்னார்கள். இருப்பினும் அதற்கான பலன் சந்தையில் எதிரொலித்தது போல் தெரியவில்லை. ஐ.எல் & எஃப்.எஸ் பிரச்னையை கூட ஆப்ஷனில் விடலாம். ஆனால் திவான் ஹவுசிங் பிரச்னையை அப்படி விட முடியவில்லை. காரணம் அந்த நிறுவனத்தின் நிலையான தன்மையையே இந்த விலை இறக்கம் கேள்வி கேட்டிருக்கிறது.
9000 கோடி ரூபாய் இழப்பு
சுமார் 610 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்குகள் திடீரென 260 ரூபாய்க்கு ஏன் இறங்க வேண்டும். அப்படியே இறங்கினாலும் திவாலாகாத நிறுவனம் என்று அவர்கள் தம்பட்டம் அடித்த பின்னும் உடனடியாக மீண்டும் அதிகரித்திருக்க வேண்டுமே... ஏன் அதிகரிக்கவில்லை. சுமார் 9000 கோடி ரூபாயை ஏன் அந்த பங்கில் முதலீடு செய்திருந்தவர்கள் இழக்க வேண்டும்.
இன்றைய நிலவரம்
நிஃப்டி காலை 10,967 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி எப்படியோ ஏற்றம் கண்டு 11,067 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. அதே போல் சென்செக்ஸ் காலை 36,305 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி நிலையான ஏற்றம் கண்டு 36,652க்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு சந்தை தன்னுடைய 100 நாள் மூவிங் ஆவரேஜுக்கு கீழ் வர்த்தகமாவதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
எல்லாம் பயத்தில் எல்லோரும் பயத்தில்
சந்தை மட்டுமல்லாமல் பாண்டுகள், கரன்ஸி வர்த்தகம் ஈக்விட்டி பங்குகள் மற்றும் கமாடிட்டி சந்தைகள் என்று அனைத்திலும் முதலீட்டாளர்கள் ஒரு விதமான பயத்திலேயே வர்த்தகம் செய்து வருகிறார்கள். பலர் செய்த முதலீடுகளை வந்த விலைக்கு விற்று வெளியேறுவதும் இந்த இறக்கத்துக்கு ஒரு முக்கிய காரணம்.
ஆர்பிஐ
இந்தப் பிரச்னைகளை சரிகட்ட மத்திய ரிசர்வ் வங்கி 10,000 கோடி ரூபாய்க்கு பாண்டுகளை வாங்க இருக்கிறது. இதனால் சந்தையில் தற்காலிகமாக கொஞ்சம் பணம் புழங்கும். இதற்குப் பிறகும் வயிற்றில் நெருப்பைப் கட்டிக் கொண்டு இருக்கும் படியாக மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் கூட்டம் வேறு அக்டோபர் 05, 2018ல் நடைபெற உள்ளது.
ஃபெடரல் பேங்க் ஆஃப் அமெரிக்கா
ஆர்பிஐ பிரச்னை நமக்கு சாதகமாக அமைந்தாலும், அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் வட்டி விகித கூட்டம் நம் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கக் காத்திருக்கிறது.
கச்சா எண்ணெய்
மேலே சொன்ன தற்காலிக வில்லன்கள் போக, நிரந்தர வில்லன்களான கச்சா எண்ணெய் விலை உயர்வு எப்போதும் இல்லாமல் இப்போது ராஜ நடை போடுகிறது. இப்போது கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 80 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. இது நிச்சயம் 100 டாலரைத் தொட்டு விடும் . ஏன் என்றால் ஒபெக் (OPEC) நாடுகள், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை சரி செய்வதற்காக தங்கள் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப் போவதில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.
வர்த்தகப் போர்
கச்சா எண்ணெய் போக நிரந்தர வில்லனாக அமெரிக்க சீன வர்த்தகப் போரும் உருவெடுத்து வருகிறது. இந்தப் போரினால் அமெரிக்கா மற்றும் சீனவுக்கிடையே பல வர்த்தகங்கள் தேங்கி நிற்கின்றன. இந்த வர்ததகங்களினால் சென்று சேர வேண்டிய பணமும் தேங்கி நிற்கிறது.
மக்களவைத் தேர்தல்
இப்படி மக்கள் பிரச்னைகளை விடுங்கள், மக்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும். அவர்களுடைய (அரசியல்வாதிகள்) முக்கியமான பிரச்னை, சந்தையை நேரடியாக பாதிக்கும் பிரச்னை ஒன்று இருக்கிறது. அது 2019 மக்களவைத் தேர்தல். ஆக அடுத்த மக்களவைத் தேர்தல் நடந்து முடியும் வரை சந்தையை எத்தனை பேர், எப்படி எல்லாம் புரட்டி எடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications