சென்செக்ஸ் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி இழப்பு..!

திங்கட்கிழமை காலையில் சென்செக்ஸ் குறியீடு 46,932 புள்ளிகளில் வர்த்தகத்தைத் துவங்கிய நிலையில், இன்றைய வர்த்தகத்தில் மிகவும் மோசமாகக் கிட்டத்தட்ட 2000 புள்ளிகள் வீழ்ச்சியில் சென்செக்ஸ் 44,923 புள்ளிகளை அடைந்தது.

இதனால் முதலீட்டாளர்கள் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இழந்துள்ளனர்.

சென்செக்ஸ் வீழ்ச்சி

சென்செக்ஸ் வீழ்ச்சி

2000 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 1,406.73 புள்ளிகள் சரிந்து 45,553 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் சுமார் 3 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது.

இதேபோல் நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 432.15 புள்ளிகள் சரிந்து 13,328.40 புள்ளிகளை அடைந்து 3.14 சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளது.

இதனால் இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இழந்துள்ளனர்.

டாப் 30 நிறுவனங்கள் பட்டியல்

டாப் 30 நிறுவனங்கள் பட்டியல்

மேலும் மும்பை பங்குச்சந்தை சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஓஎன்ஜிசி பங்குகள் அதிகப்படியாகச் சுமார் 9 சதவீத வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் ஓஎன்ஜிசி 9.15 சதவீத வீழ்ச்சி, இன்டஸ்இந்த் வங்கி 6.98 சதவீத வீழ்ச்சி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 6.26 சதவீத வீழ்ச்சி அடைந்தது.

பல மாத சரிவில் முக்கிய நிறுவனங்கள்

பல மாத சரிவில் முக்கிய நிறுவனங்கள்

இன்றைய வர்த்தகத்தில் NALCO 8 மாத வீழ்ச்சி, ZEE 6 மாத வீழ்ச்சி, பெட்ரோநெட் எல்என்ஜி 9 மாத வீழ்ச்சி, NBCC 8 மாத வீழ்ச்சி, firstsource 6 மாத வீழ்ச்சி, டாடா மோட்டார்ஸ் 7 மாத வீழ்ச்சி, ஆர்பிஎல் பேங்க் 7 மாத வீழ்ச்சி, ஐடிசி 7 மாத வீழ்ச்சி, BEL 3 மாத வீழ்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

பொதுத்துறை வங்கி மற்றும் உலோக துறை

பொதுத்துறை வங்கி மற்றும் உலோக துறை

இதேபோல் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி பங்குகளும், உலோக துறை பங்குகளும் அதிகளவிலான வீழ்ச்சியை அடைந்ததுள்ளது. இதோடு சந்தையில் டாப் நிறுவனங்கள் அனைத்தும் அதிகளவிலா வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் இன்று பெருமளவிலான வீழ்ச்சியைச் சந்தித்தனர்.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

பிரிட்டன் நாட்டின் கொரோனா தொற்றுக் காரணமாக அன்னிய முதலீடுகளின் அளவு பெருமளவில் குறைந்துள்ள நிலையில், அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு முதலீடுகள் வெளியேறிய நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 வாரச் சரிவைச் சந்தித்துள்ளது.

நாணய சந்தை

நாணய சந்தை

நாணய சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.79 ரூபாயாகச் சரிந்து 2 வார சரிவைப் பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகச் சந்தை முடிவில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.57 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் சந்தை சரிவு

கச்சா எண்ணெய் சந்தை சரிவு

இதேபோல் உலக நாடுகள் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் கச்சா எண்ணெய் தேவை குறையும். இதன் வாயிலாகக் கச்சா எண்ணெய் சந்தையில் இதன் விலை சுமார் 2 டாலர் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

ஏற்கனவே கச்சா எண்ணெய் பழைய விலைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வரும் நிலையில் இன்றைய சரிவு கச்சா எண்ணெய் முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் 2.06 டாலர் சரிந்து 50.20 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் WTI கச்சா எண்ணெய் விலை 1.95 டாலர் சரிந்து 47.15 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது

ஐரோப்பியச் சந்தை நிலவரம்

ஐரோப்பியச் சந்தை நிலவரம்

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக இன்று இங்கிலாந்து பங்குச்சந்தை 2.62 சதவீதம், பிரான்ஸ் 3.37 சதவீதம், ஜெர்மனி 3.56 சதவீதம், ஸ்விஸ் 1.90 சதவீதம் என மொத்த ஐரோப்பியச் சந்தையும் 2.90 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

ஐரோப்பியச் சந்தையின் இன்று ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அமெரிக்கச் சந்தையில் பெரிய அளவிலான வீழ்ச்சியை எதிர்கொள்ளும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+