அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்க பொருட்களுக்கு அதிகம் வரி விதிக்கும் நாடுகளுக்கு அதேபோல் பரஸ்பர விதிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். இந்த பரஸ்பர வரி விதிப்பு ஏப்ரல் 2ம் தேதி நடைமுறைக்கு வர உள்ளது. இந்த வரி விதிப்பு அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் உபரியை கொண்டுள்ள நாடுகளை குறிவைப்பதாக இருக்கிறது.
டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை சர்வதேச வர்ததக போரை உருவாக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பால் வரி ராஜா என்று முத்திரை குத்தப்பட்ட இந்தியா, பரஸ்பர வரி விவகாரத்தில் நேரடியாக பிரச்சினையில் சிக்கியுள்ளது. இந்த வரி விதிப்பால், நம் நாடு ஏற்றுமதியில் 3,100 டாலர் வரை இழப்புகளை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

டிரம்பின் வரி விதிப்பால் அதிகம் பாதிக்கப்படகூடிய துறைகளில் ஒன்று மருந்து. அமெரிக்கா தற்போது மருந்து இறக்குமதிகளுக்கு குறைந்தபட்ச வரிகளை விதிக்கிறது. அதேசமயம் நம் அமெரிக்க மருந்துகளுக்கு 10 சதவீதம் வரி விதிக்கிறது. இதனால் இந்திய மருந்து பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையின் எல்லைக்குள் வைக்கிறது. இது இந்திய மருந்து உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். பல இந்திய மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் 5 முதல் 20 சதவீதம் வரையிலான குறைந்த லாப வரம்பில் செயல்படுகின்றன. அதிக வரிகளின் கீழ் லாபம் சாத்தியமானதாக இருக்க, அவர்கள்
தங்கள் தயாரிப்பு உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த வாரம் சன்பார்மா,சிப்லா, லுப்பின், டாக்டர் ரெட்டீஸ் மற்றும் டிவிஸ் லேப்ஸ் ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும்.
அடுத்ததாக நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை அதிகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலபார் கோல்ட், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்,ரென்சேன்ஸ் ஜூவல்லரி மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட பல இந்திய நகை நிறுவனங்கள் அமெரிக்க சந்தையில் வளர்ந்து வரும் இருப்பை கொண்டுள்ளன. இந்த வாரம் இந்த நிறுவன பங்குகள் மீது முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவின் ஐடி சேவைகள் துறை பெரும்பாலும் நேரடி வரி விதிப்பு விளைவுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு விதத்தில் இத்துறைக்கு வில்லங்கம் வர வாய்ப்புள்ளது. வர்த்தக பதட்டங்கள் அதிகரித்து அமெரிக்காவில் வாடிக்கையாளர் செலவினம் இறுக்கமடைந்தால், இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்ற இந்திய ஐடி நிறுவனங்கள் நிதி விஷயத்தில் இழுபறியான நிலையை உணர வாய்ப்புள்ளது.
அதேசமயம், அமெரிக்காவுடான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் மீதான வரிகளின் தாக்கத்தை குறைக்கக்கூடும் என்று நொமுராவின் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், மற்ற நாடுகளை காட்டிலும் டிரம்ப் நிர்வாகத்திடம் அதிக இணக்கமான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது. பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் பலனளிக்க சிறிது காலம் எடுக்கும் என்றாலும், அது ஒரு ஊக்கமளிக்கும் அறிகுறியாக நாங்கள் கருதுகிறோம். பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் மீதான அத்தகைய வரிகளின் தாக்கத்தை குறைக்கக்கூடும் என்பதை குறிக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!



Click it and Unblock the Notifications