சென்செக்ஸ் முடிவில் 1181 புள்ளிகள் அல்லது 1.95% அதிகரித்து, 61,795 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 322 புள்ளிகள் அல்லது அல்லது 1.78% அதிகரித்து, 18,349.70 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் பி எஸ் இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம், கடந்த அமர்வில் 281.6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, இன்று 284.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரே அமர்வில் 2.9 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கிட்டதட்ட 3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.
குறியீடுகளின் நிலவரம்
இன்றைய வர்த்தக அமர்வில் அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்பட்டாலும், நிஃப்டி ஐடி குறியீடு மட்டும் 4% மேலாக ஏற்றம் கண்டு, டாப் கெயினராக காணப்படுகின்றது. இதே பி எஸ் இ டெக் குறியீடானது 3% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. மற்ற அனைத்து குறியீடுகளும் 2% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக், அப்பல்லோ ஹாஸ்பிட்டல், டிசிஎஸ், டெக் மகேந்திரா பங்குகள் டாப் கெயினர்களாக உள்ளன. டாப் 5 பங்கினில் 4 பங்குகள் ஐடி பங்குகளாக உள்ளன. இவற்றில் அனைத்துமே 3% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. அதேசமயம் ஈச்சர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக், டிசிஎஸ், டெக் மகேந்திரா, விப்ரோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாக உள்ளன. இதில் டாப் 5 பங்குகளுமே ஐடி பங்குகளாக உள்ளன. இவை அனைத்துமே 3% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இதே ஈச்சர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், எம் & எம் உள்லிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தொடக்கம் எப்படி?
சென்செக்ஸ் 827.54 புள்ளிகள் அல்லது 1.37% அதிகரித்து, 61,441.24 புள்ளிகளாகவும், நிஃப்டி 241 புள்ளிகள் அல்லது 1.34% அதிகரித்து, 18,269.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதே ப்ரீ ஒபனிங் சந்தையில் சென்செக்ஸ் 330.91 புள்ளிகள் அல்லது 0.55% அதிகரித்து, 60,944.61 புள்ளிகளாகவும், நிஃப்டி 150 புள்ளிகள் அல்லது 0.83% அதிகரித்து, 18,178.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications