பிப்ரவரி 1ம் தேதியன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் நிதியாண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளால் சில நிறுவன பங்குகளின் விலை உயரலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அப்படி உயரும் என எதிர்பார்க்கப்படும் பங்கு தான் ஐஆர்எஃப்சி. கடந்த ஓராண்டு காலமாக பங்குச் சந்தையில் இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐஆர்எஃப்சி) நிறுவன பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

மத்திய அரசுக்கு சொந்தமான இந்நிறுவனம் முதலீட்டாளர்களின் பணத்தை 2 மடங்குக்கு மேல் பெருக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கி அல்லாத நிதி சேவை நிறுவன பிரிவை சேர்ந்த ஐஆர்எஃப்சி நிறுவனம் இந்திய ரயில்வேயின் மேம்பாட்டுக்கு தேவைப்படும் நிதியை உள் மற்றும் வெளிநாடுகளின் பங்குச்சந்தைகளில் திரட்டி வழங்கிறது. இந்நிறுவனம் தொடர்ந்து நல்ல லாபம் மற்றும் வருவாய் ஈட்டி வருவது நேர்மறையான விஷயம்.
2023 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.6,767 கோடியும், நிகர லாபமாக ரூ.1,549 கோடியும் ஈட்டியுள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதும் இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதற்கு ஒரு முக்கிய காரணம். 2024ம் ஆண்டிலும் இப்பங்கின் விலை ஏற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் தொழில்நுட்ப ஆய்வாளர் நிலேஷ் ஜெயின் கூறுகையில், ஐஆர்எஃப்சி பங்குகள் நல்ல வேகத்தில் இருக்கிறது. இந்த பொதுத்துறை பங்கு மிகவும் நேர்மறையாக காணப்படுகிறது. இருப்பினும் தற்போதைய விலையில் புதிதாக இப்பங்குகளை வாங்குவது நல்லதல்ல. இப்பங்கின் சப்போர்ட் விலையானது ரூ.115 என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்குகளை வைத்திருப்பவர்கள் பங்கின் விலை ரூ.150-170 என்ற இலக்கை எட்டும் வரை பங்குகளை வைத்திருக்கலாம் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உயர்வான ரூ.155ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் இதுவரை (ஜனவரி 14 வரை) ஐஆர்எஃப்சி பங்கு விலை 13 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 36 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் இப்பங்கின் விலை 51 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இப்பங்கு 244 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 392 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஐஆர்எஃப்சி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு இரு முறை தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கி வருகிறது.
2021ம் ஆண்டில் இந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இரு முறை டிவிடெண்டாக மொத்தம் ரூ.1.82 வழங்கியது. 2020ம் ஆண்டில் செப்டம்பரில் ரூ.0.63-ம், நவம்பரில் ரூ.0.80-ம் டிவிடெண்ட் வழங்கியது. கடந்த 2023ம் ஆண்டில் செப்டம்பரில் ரூ.0.70ம், நவம்பரில் ரூ.0.80ம் டிவிடெண்ட் வழங்கியது. தற்போதைய சந்தை விலையில், இந்நிறுவன பங்குகளின் டிவிடெண்ட் வருவாய் 1.32 சதவீதமாக உள்ளது.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications