பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு லாங் வீக்கெண்ட் ஓய்வு. இன்று ஏப்ரல் 3, 2026, புனித வெள்ளியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகளான NSE மற்றும் BSE-க்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் வர்த்தக இரைச்சல்களுக்கு இடையே, இந்த மூன்று நாள் விடுமுறை முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறிய இடைவேளையை கொடுத்துள்ளது. இன்று வர்த்தகம் நடக்குமா? கமாடிட்டி சந்தை நிலவரம் என்ன? சந்தை மீண்டும் எப்போது திறக்கும்? வாருங்கள் முழுமையாக தெரிந்து கொள்வோம்.
கடந்த மார்ச் 31 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறையாக இருந்தது. இதனிடையே தற்போது புனித வெள்ளியை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைகளான BSE (மும்பை பங்குச்சந்தை) மற்றும் NSE (தேசிய பங்குச்சந்தை) இன்று செயல்படாது. இந்த வாரத்தில் இது இரண்டாவது சந்தை விடுமுறையாகும். முன்னதாக மார்ச் 31 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தின் முதல் வர்த்தக விடுமுறை இதுவாகும்.

வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 6) அன்று தொடங்கும். இன்று விடுமுறை ஆதலால் அதன் எதிரொலி திங்கட்கிழமையன்று இருக்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய கமாடிட்டி சந்தையான MCX (Multi Commodity Exchange) இன்று முழுமையாக மூடப்பட்டிருக்கும். வழக்கமாக மாலை நேரத்தில் செயல்படும். இரண்டாம் அமர்வு (Evening Session) உட்பட இன்று காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களிலும் வர்த்தகம் கிடையாது. இதனால் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் மற்றும் இதர உலோகங்களின் வர்த்தகம் இன்று நடைபெறாது.
இந்தியாவில் மட்டுமின்றி, புனித வெள்ளியை முன்னிட்டு அமெரிக்க பங்குச்சந்தைகள், பெரும்பாலான ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.
ஏப்ரல் மாதத்தில் மொத்தம் இரண்டு நாட்கள் பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக இன்று (புனித வெள்ளி), இரண்டாவதாக ஏப்ரல் 14 அன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படும். வார இறுதி நாட்களை (சனி, ஞாயிறு) தவிர்த்து ஏப்ரல் மாதத்தில் இந்த இரண்டு நாட்கள் சந்தை செயல்படாது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications