பிக்சட் டெபாசிட், நிலம் போன்றவற்றை காட்டிலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பல மடங்கு லாபம் பார்க்கலாம் என்று பலரும் சொல்ல கேட்டு இருப்போம். ஆனால் இது உண்மையா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். சரியான பங்குகளில் முதலீடு செய்தால் அது சாத்தியமான ஒன்றுதான்.
உதாரணமாக ஒரு ஸ்மால் கேப் பங்கு ஒராண்டில் முதலீட்டாளர்களுக்கு 1,845 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. அந்த மல்டிபேக்கர் பங்கு ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ். ஒராண்டுக்கு முன்பு இந்நிறுவன பங்கில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்து இருந்தால் அது தற்போது ரூ.1,94,000 ஆக உயர்ந்திருக்கும்.

ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள் தயாரிப்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. 1999ல் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பாலாஜி சக்தி பிராண்டின் கீழ் தனது டிஎம்டி பார்களை (தெர்மோ மெக்கானிக்கல் ட்ரீட்டட் பார்கள்) விற்பனை செய்கிறது.
இந்நிறுவனம் தனது இரும்பு மற்றும் ஸ்டீல் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப நிலவரம் வலுவாக உள்ளது.
2023 செப்டம்பர் காலாண்டில் ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபம் 862 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.202 கோடியாக அதிகரித்துள்ளது. 2022 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.22 கோடியாக இருந்தது.
2023 ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.170 கோடி ஈட்டியிருந்தது. 2023 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 13 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,547 கோடியாக அதிகரித்துள்ளது. 2022 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1,369 கோடி ஈட்டியிருந்தது.
ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு மல்டிபேக்கர் பங்காக விளங்குகிறது. கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஜூன் ஆகிய 4 மாதங்களில் மட்டும் இப்பங்கின் விலை சரிந்தது. அதேசமயம் இதர எட்டு மாதங்களில் இப்பங்கு விலை ஏற்றம் கண்டது.
இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நினைத்து பார்க்காத லாபத்தை குறுகிய காலத்தில் வழங்கியுள்ளது. 2023 ஜனவரியில் ரூ.53.8ஆக இருந்த இப்பங்கின் விலை 2024 ஜனவரியில் ரூ.1,046.90ஆக உயர்ந்துள்ளது.
இந்த காலத்தில் இப்பங்கு 1,845 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த ஆண்டு ஜனவரியில் நீங்கள் இந்நிறுவன பங்குகளில் ரூ.10,000 முதலீடு செய்து இருந்தால் அது தற்போது ரூ.1.94 லட்சமாக உயர்ந்திருக்கும்.
இந்த மாதத்தில் இதுவரை இப்பங்கு விலை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. 2023 ஜூலை முதல் தொடர்ந்து 8 மாதங்களாக இப்பங்கு விலை ஏறுமுகத்தில் உள்ளது. 2023 ஜூலை முதல் 2024 ஜனவரி (17ம் தேதி வரை) வரையிலான காலத்தில் இப்பங்கு விலை 1,277 சதவீதம் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை ரூ.1,012.70ல் முடிவுற்றது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications