ஜப்பான் பங்குச் சந்தையின் முதன்மை பங்கு குறியீடான நிக்கி, திங்கட்கிழமை முதல் முறையாக 40,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தொழில்நுட்ப பங்குகளின் விலை உயர்வு இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஜப்பான் பொருளாதாரம் தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக ஜிடிபி வளர்ச்சியில் சரிவை எதிர்கொண்டு வரும் வேளையில் தற்போது ரெசிஷனுக்குள் மாட்டிக்கொண்டது பிப்ரவரி மாதம் நடந்த மறக்க முடியாத நிகழ்வு. இந்த மேசமான நிலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது, ஜப்பானில் உள்நாட்டுத் தேவையில் ஏற்பட்ட பெரிய அளவிலான சரிவு தான்.

இந்த நிலையில் இருந்து விரைவில் மீண்டு வரக்கூடும் என கணிக்கப்பட்டாலும், ஜப்பான் நாட்டின் இந்த வீழ்ச்சி சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெக் பங்குகளின் உயர்வின் மூலம் நிக்கி குறியீடு வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது.
30 வருடங்களுக்கு முன்பு ஜப்பான் பங்குச் சந்தை உச்சத்தில் இருந்த "பொற்காலம்" விட அதிகப்படியான உயர்வைப் கடந்த மாதம் முதல் பதிவு செய்து வருகிறது. இதன் மூலம் ஜப்பான் பங்குகள் தொடர்ந்து சாதனை உயர்வையே பதிவு செய்து வருவதைப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கொண்டாடி வருகின்றனர், கிட்டத்தட்ட இந்திய பங்குச்சந்தையைப் போலவே தினமும் உயர்ந்து சாதனை உச்சத்தை எட்டி வருகிறது.
ஜப்பான் பங்குச்சந்தையின் இந்த உயர்வுக்கு அந்நாட்டின் நிறுவன நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் குறைவான மதிப்பீடுகள் ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில், அமெரிக்கப் பங்குச் சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பங்குகளின் விலை உயர்வால், ஜப்பான் தொழில்நுட்ப பங்குகள் நிக்கே குறியீட்டை 40,000 புள்ளிகளுக்கு மேல் உயர்த்தி 40192.48 அடைந்தது. ஜப்பானின் மற்றொரு முக்கிய பங்கு குறியீடான டோபிக்ஸ் 0.02% சரிவில் 2709.07 புள்ளிகளில் இருந்தது.
ஜப்பான் பங்குச்சந்தை உயர்வு வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் ஸ்&பி 500 மற்றும் நாஸ்டாக் குறியீடுகளின் சாதனை அளவுக்கும் முக்கிய காரணமாகும்.
மும்பை பங்குச்சந்தை இன்றைய வர்த்தகத்தில் தற்போது சென்செக்ஸ் குறியீடு 63.39 புள்ளிகள் உயர்ந்து 73,869.54 புள்ளிகளை எட்டியுள்ளது, இன்று அதிகப்படியாக 73,990.13 புள்ளிகளைத் தொட்டு உள்ளது. சென்செக்ஸ் குறியீடு மார்ச் 2 ஆம் தேதி சிறப்பு வர்த்தக நாளில் 73994.7 புள்ளிகளைத் தொட்டு புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications