மருத்துவ துறையை சேர்ந்த நிறுவனம் ஜீனா சிகோ லைஃப்கேர் லிமிடெட். இந்நிறுவனம் பல்வேறு நோய்களுக்கு ஆயுர்வேத தீர்வை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் நெட்வொர்க்கில் 119 கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. இதில் சிறப்பு எச்ஐஐஎம்எஸ் மற்றும் சுத்தி பஞ்சகர்மா மையங்களும் அடங்கும். இந்நிறுவனத்தின் 17 மருத்துவமனைகளுக்கு என்ஏபிஎச் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது இந்நிறுவனத்தின் ஒரு சான்றாகும்.
1க்கு 5 பங்குகள்
ஜீனா சிகோ லைஃப்கேர் லிமிடெட். நிறுவனம் பங்கு பிரிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதாக அறிவித்தது. அதாவது ரூ.10 முக மதிப்புள்ள ஒரு பங்கினை ரூ.2 முக மதிப்புள்ள 5 பங்குகளாக பிரிக்க உள்ளதாகவும், இது பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்றும் ஜீனா சிகோ லைஃப்கேர் லிமிடெட் நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், 2025 மே 23ம் தேதியன்று பங்கு பிரிப்பு நடவடிக்கைக்கு அஞ்சல் வாக்குச் சீட்டு செயல்முறை மூலம் ஈக்விட்டி பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஜீனா சிகோ லைஃப்கேர் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, பங்கு பிரிப்புக்கு தகுதியுள்ள பங்குதாரர்களின் உரிமையை உறுதி செய்வற்கான பதிவு தேதியாக 2025 ஜூன் 12 வியாழக்கிழமையை நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது. பங்குகளை பிரிப்பதால், சில்லரை முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகளை எளிதாக அணுகக் கூடியதாக மாற்றும். சந்தையில் பங்குகளின் பணப்புழக்கத்தை மேம்படுத்தும்.
குறைந்தபட்சம்
2024 ஜூலை 23ம் தேதியன்று தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஜீனா சிகோ லைஃப்கேர் லிமிடெட் நிறுவன பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.997.50ஆக சரிந்தது. இருப்பினும் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டது. கடந்த டிசம்பர் 9ம் தேதியன்று இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.2,498.60ஐ எட்டியது.
தேசிய பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் ஜீனா சிகோ லைஃப்கேர் லிமிடெட் நிறுவன பங்கின் விலை ரூ.2,149.40ஆக இருந்தது. இந்நிறுவன பங்கு அதன் 52 வார குறைந்தபட்ச விலையான ரூ.997.50லிருந்து 117 சதவீத மல்டிபேக்கர் வருமானத்தை அளித்துள்ளது. இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ.5,344 கோடியாக உள்ளது.
லாபம்
ஜீனா சிகோ லைஃப்கேர் லிமிடெட் நிறுவன பங்குகள் 43 சதவீத பங்கு மூலதனம் மீதான வருமானத்தை (ஆர்ஓசி) கொண்டுள்ளது. 2025 மார்ச் காலாண்டில் ஜீனா சிகோ லைஃப்கேர் லிமிடெட் நிறுவனம் வருவாயாக சுமார் ரூ.255 கோடி ஈட்டியுள்ளது. அதே காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக சுமார் ரூ.43.84 கோடி ஈட்டியுள்ளது.
2030ல் தங்கம் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா..? இப்போ எவ்வளவு வாங்க முடியுமோ வாங்கிகோங்க..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications