இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த சில மாதங்களாக வர்த்தகம் சரிவு பாதையில் இருந்து வருகிறது. மந்தமான சந்தை நிலவரம் காரணமாக, கடந்த சில மாதங்களில் நகை துறையை சேர்ந்த பங்குகள் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன.
சென்கோ கோல்ட், கல்யாண் ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட நகை நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிவடைந்துள்ளது. இவ்வளவுக்கும் கடந்த காலங்களில் இந்நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை கொடுத்த பங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்கோ கோல்ட் பங்குகள் அது பட்டியலிடப்பட்டது முதல் 66 சதவீதம் கொடுத்துள்ளன. இருப்பினும் சந்தை சரிவு காரணமாக கடந்த மாதம் இப்பங்கின் விலை 30 சதவீதம் குறைந்துள்ளது. சென்கோ கோல்ட் நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.33.48 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 69 சதவீதம் குறைவாகும். கடந்த திங்கட்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் சென்கோ கோல்ட் நிறுவன பங்கின் விலை ரூ.324.85ஆக இருந்தது.
கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் அது பட்டியலிடப்பட்டது முதல் 564 சதவீதம் ஆதாயம் கண்டது. இருப்பினும், இந்நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள், சந்தை நிலவரம் போன்ற காரணங்களால் கடந்த மாதம் 8 சதவீதம் வீழ்ச்சி கண்டது. கடந்த இரண்டு மாதங்களை கணக்கில் கொண்டால் இந்நிறுவன பங்கின் சரிவு அதிகமாக இருக்கலாம்.
கடந்த திங்கட்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.507.05ஆக இருந்தது. இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 4 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது.
பின் காட்கில் ஜூவல்லர்ஸ் பங்குகள் அவை பட்டியலிடப்பட்டது முதல் 26 சதவீதம் சரிவை கண்டுள்ளது. கடந்த மாதத்தில் இப்பங்கின் விலை 5 சதவீதம் வீழ்ச்சி கண்டது. கடந்த திங்கட்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.573.85ஆக இருந்தது. இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 5 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது.
பங்குகள் சரிவு நகை துறையில் காணப்படும் பரந்த பலவீனத்தை பிரதிபலிக்கிறது. இது தொடர்பாக சந்தை நிபுணர் ஒருவர் கூறுகையில், டைட்டன் போன்ற இத்துறையை சேர்ந்த ஒரு பெரிய நிறுவனம் லாப வரம்புகள் அல்லது வளர்ச்சி மீதான அழுத்தம் குறித்து கவலை தெரிவித்தபோது, இந்த நிறுவனங்களில் பல தொடர்ந்து ஆக்ரோஷமான வளர்ச்சி மற்றும் அதிக லாப வரம்புகளை அடைந்தன. இது நம்பமுடியாததாகி விடுகிறது.
அதில் பெரும்பகுதி வெறும் சரக்குகளை சேமித்து வைத்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். இரண்டாவது விற்பனை எதுவும் நடக்கவில்லை. அவர்கள் தங்கள் ஷோரூம்களில் பொருட்களை மட்டுமே போட்டு கொண்டிருந்தார்கள். இப்போது அந்த சரிசெய்தல் நடக்கிறது. இந்த வீழ்ச்சிக்கு பிறகும் இந்த நிறுவனங்களின் தற்போதைய மதிப்பீடுகளும் மிகையானவை என்று நான் நினைக்கிறேன். இந்த சிறிய நிறுவனங்களில் சில 50 சதவீத வீழ்ச்சிக்கு பிறகும் டைட்டனை விட அதிக மதிப்பீட்டில் வர்த்தகம் செய்தன. அவை அதற்கு தகுதியானவை என்று நான் நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

வாகன சோதனையில் பணம் பறிமுதல்:மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்னென்ன ஆவணங்கள் ஏற்கப்படும்? #தேர்தல்2026

ரூ.7 லட்சம் கோடி மாயம்.. பங்குச்சந்தையில் என்ன தான் நடக்குது..?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்



Click it and Unblock the Notifications