பங்குச்சந்தை முதலீட்டாளர்களை எச்சரிக்கும் ஜிம் ரோஜர்ஸ்.. பணமாக வைத்திருப்பது பெஸ்ட்

இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தற்போது முக்கிய முதலீட்டு தளமாக திகழ்வது பங்குச்சந்தை தான், சமீபத்திய பங்குச் சந்தை வீழ்ச்சி முதலீட்டு வல்லுனர்கள் மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அனுபவமிக்க அமெரிக்க முதலீட்டாளரான ஜிம் ரோஜர்ஸ், அடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி மிகவும் மோசமாக இருக்கும் என்பதால், தனது சொத்துக்களில் பெரும்பாலானவற்றை பணமாக வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

ஏற்கனவே பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நேற்றைய வீழ்ச்சியில் இருந்து எப்படி மீண்டு வருவது என தெரியாமல் குழம்பிக்கொண்டு இருக்கும் வேளையில் ஜிம் ரோஜர்ஸ்-ன் பேச்சு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜிம் ரோஜர்ஸ் சொல்வது என்ன..? வாங்க முழுமையாக தெரிந்துக்கொள்வோம்.

பங்குச்சந்தை முதலீட்டாளர்களை எச்சரிக்கும் ஜிம் ரோஜர்ஸ்.. பணமாக வைத்திருப்பது பெஸ்ட்

"அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தை ஒரு பிரச்சனைக்கு நீண்ட காலமாக காத்திருக்கிறது, ஆனால் இது தொடர்ந்து தாமதமாகி வருகிறது. என்னுடைய முதலீட்டு போர்ட்போலியோ-வில் அதிகப்படியாக தொகை பணமாக வைத்திருப்பதற்கு காரணம், அடுத்த பங்குச்சந்தை சரிவு என்பது என் வாழ்நாளில் மிக மோசமானதாக இருக்கும் என்று நான் நம்புவது தான், இதற்கு முக்கியமான காரணம் உலகில் அனைத்து நாடுகளிலும் அதிகப்படியான கடன் நிலுவையில் உள்ளது. இந்தியாவிலும் இப்போது கடன் உள்ளது. எனவே, இதை கண்டு நீங்கள் கட்டாயம் கவலைப்பட வேண்டும், அச்சப்பட வேண்டும். நானும் அப்படி தான் கவலைப்படுகிறேன். இதனால் அடுத்து பங்குச்சந்தையில் ஏற்படும் வீழ்ச்சி மிகவும் மோசமாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு, இந்த மோசமான சரிவின் ஆரம்பக்கட்டமாகவும் இது இருக்கலாம். ஆனால் இதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது" என்று ஜிம் ரோஜர்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களை போலவே முதலீட்டாளர்கள் அனைவரும் கையிருப்பில் பணத்தை அதிகரிக்க வேண்டுமா என்பது குறித்து கேட்டபோது, ஜிம் ரோஜர்ஸ் தான் அதிக பணம் வைத்திருக்க விரும்புவதாகக் கூறினார்.

"சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளில் மிக நீண்ட காலமாக முதலீட்டுக்கு ஏதுவான சூழ்நிலை இருந்து வருகின்றன. வரலாற்றை புரட்டிப் பார்த்தால், எப்போதெல்லாம் அனைவரும் நிறையப் பணம் சம்பாதிக்கிறார்களோ , ​​அது கவலைப்பட வேண்டிய நேரமாக மாறும். எனவே தான், நான் இப்போது கவலைப்படுகிறேன்," என்று அவர் கூறினார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது வாங்க வேண்டி விரும்பினால், நான் வெள்ளியை வாங்குவேன் என்று ஈடி நவ் பேட்டியில் ஜிம் ரோஜர்ஸ் தெரிவித்தார்.

கடந்த வாரம், உலகின் முன்னணி பணக்காரரும், பெரும் பங்குச்சந்தை முதலீட்டாளருமான பெர்க்ஷைர் ஹேதவே நிறுவனத்தின் தலைவரான வாரன் பஃபெட்டின் முதலீட்டு போர்ட்போலியோவில் ரொக்க இருப்பு கிட்டத்தட்ட 277 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகவும், ஆப்பிள் நிறுவனத்தில் பெர்க்ஷைர் ஹேதவே வைத்திருந்த பங்குகளில் பாதிக்கும் அதிகமான பங்கை விற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பெர்க்ஷைர் ஹேதவே நிறுவனத்தின் ரொக்க பங்கு ஜூன் 30 நிலவரப்படி 276.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது மூன்று மாதங்களுக்கு முன்பு 189 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜூன் காலாண்டில் பெர்க்ஷைர் சுமார் 75.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றதால் ஏற்பட்ட உயர்வாகும். பெர்க்ஷைர் ஹேதவே நிறுவனம் ஜூன் காலாண்டில் பங்குகளை வாங்கியதை விட பங்குகளை விற்றது தான் அதிகம். கிட்டத்தட்ட 7 காலாண்டாக பெர்க்ஷைர் ஹேதவே நிறுவனம் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகிறது.

வாரன் பஃபெட்-ன் பெர்க்ஷைர் ஹேதவே நிறுவனம் பங்குச்சந்தை முதலீட்டில் பல தசாப்தங்களாக உள்ளது, ஜிம் ரோஜர்ஸ் கூறுவதைப் போலவே வாரன் பஃபெட்-ம் அதிகப்படியான பணத்தை இருப்பாக வைத்துள்ளார், இதனால் அடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி என்பது மிகவும் அருகில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பங்குச்சந்தை முதலீட்டை அமெரிக்காவின் ஏமாற்றம் அளிக்கும் வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரங்கள் மற்றும் யெனின் கேரி டிரேட் ஆகியவை உலகளாவிய சந்தை மந்தநிலையில் தள்ளியுள்ளது.

ஜிம் ரோஜர்ஸ் அமெரிக்கா முதலீட்டாளராக இருந்தாலும், சிங்கப்பூரில் இருந்து இயங்கி வருகிறார். தற்போது Beeland Interests, Inc. நிறுவனத்தின் சேர்மன் ஆக இருக்கும் ஜிம் ரோஜர்ஸ் குவான்டம் பண்ட், சோரஸ் பண்ட் ஆகியவற்றின் இணை நிறுவனராக இருந்தார். Rogers International Commodities Index உருவாக்கியதும் இவர் தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+