பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பலர் விலை உயர்ந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதை காட்டிலும் மல்டிபேக்கர் பங்குகளில் முதலீடு செய்ய அதிகம் விரும்புவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் லம்பான ஆதாயத்தை பார்த்து விடலாம் என்பதே இதற்கு காரணம்.
அதேசமயம் மல்டிபேக்கர் பங்கை கண்டுபிடித்து முதலீடு செய்வதில் தான் முதலீட்டாளரின் திறமையே இருக்கிறது. தற்போது மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றாக ரயில்வே துறையின் ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட் உருவெடுத்துள்ளது.

ரயில்வே துறையை சார்ந்த ஒரு தனியார் நிறுவனம் தான் இந்த ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட். இந்நிறுவனம் ரயில் சரக்கு பெட்டிகள், பயணிகள் பெட்டிகள் உள்ளிட்டவைகளை உற்பத்தி செய்து வருகிறது. ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தகம் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.
அதற்கு சாட்சியாக அந்த நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் உள்ளன. ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவனம் நேற்று தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவனம் 2023 செப்டம்பர் காலாண்டில் ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவனம் நிகர லாபமாக ரூ.82 கோடி ஈட்டியுள்ளது.
2022 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் தற்போது ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் 241 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த செப்டம்பர் காலாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் 112 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.885.1 கோடியாக அதிகரித்துள்ளது.
ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் இன்ப அதிர்ச்சியாக அமைந்ததால், மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை 5 சதவீத அப்பர் சர்க்கியூட்டை தொட்டது குறிப்பிடத்தக்கது. வர்த்தகத்தின் முடிவில் ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை ரூ.317ஆக இருந்தது.
கடந்த ஒராண்டில் ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை 334 சதவீதம் உயர்ந்துள்ளது. 2023ம் ஆண்டில் தற்போது வரை ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 237 சதவீதம் லாபம் அளித்துள்ளது.
2022 நவம்பர் 3ம் தேதியன்று ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை 52 வார குறைந்த அளவான ரூ.71.05ஐ எட்டியது. ஆனால் அதற்கு அடுத்த 10 மாதங்களிலே பங்கு விலை 52 வார அதிகபட்சமான ரூ.412.50ஐ தொட்டது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை ரூ.322 வரை உயர்ந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை மும்பை பங்குச்சந்தையில் 1.47 சதவீதம் குறைந்து 312.35 ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications