ஒரே நாளில் 20% உயர்ந்த ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்கு.. காரணம் என்ன?

இந்தியாவில் புகழ்பெற்ற ஜஸ்ட் டயல்(JUST DIAL) நிறுவனம் இதுவரை இல்லாத அளவாக ஒரே காலாண்டில் 200 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது. ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 19.5% உயர்ந்தது.

ஜூலை 18-ஆம் தேதி அன்று மும்பை பங்குச்சந்தையில் ஒரே நாளில் ஜஸ்ட் டயல் நிறுவனப் பங்கு 19.5% உயர்ந்து தன்னுடைய 52 வார கால உச்சத்தை எட்டியது. அதாவது 1304.60 ரூபாய் என வர்த்தகமானது. ஜஸ்ட் டயல் நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில் தங்களது நிறுவனம் இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச காலாண்டு வருவாய் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் மட்டும் 280 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 13.6 சதவீதம் அதிகம். இந்த காலாண்டில் மட்டும் ஜஸ்ட் டயல் நிறுவன இணையதளத்தை அணுகியவர்கள் எண்ணிக்கை 181.3 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 5.7 சதவீதம் உயர்வாகும்.

தங்களுடைய பயனாளர்களுக்கு சிறந்த அனுபவங்களை தருவதற்காக கூடிய விரைவில் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு வரப் போவதாக ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஸ்வேதாங்க் தீக்ஷித் தெரிவித்துள்ளார். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் முந்தைய ஆண்டை விட கூடுதலாக 5.7 சதவீதம் பேர் இந்த தளத்தை அணுகியுள்ளனர். குறிப்பாக ஜஸ்ட் டயல் தளத்தினை செல்போன் வழியாக அணுகுபவர்களின் எண்ணிக்கை 85.3% என உயர்வு கண்டுள்ளது.

ஒரே நாளில் 20% உயர்ந்த ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்கு.. காரணம் என்ன?

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகள் கணிசமான அளவு உயர்வை கண்டன. ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்கு கடந்த ஓராண்டு காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 54 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 693 ரூபாய், 52 வார காலம் அதிகபட்ச மதிப்பு 1304.60 ரூபாய் ஆகும்.

இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 10,565 கோடி ஆகும். இந்த நிறுவன பங்கின் பேஸ் வேல்யூ 10 ,புக் வேல்யூ 473.13. இந்த நிறுவன பங்குகளில் 74 சதவீதம் பிரமோட்டர்களிடம் இருக்கிறது, வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் 7 சதவீத பங்குகளை கொண்டுள்ளன.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+