தங்கம் வியாபாரம் தான் தூள் பறக்குது.. வருமானத்தை அள்ளிய கல்யாண் ஜூவல்லர்ஸ்..!!

பிரபல நகை விற்பனை நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகள் பாசிடிவாக வந்துள்ளன. அதாவது விற்பனை அதிகரித்து வருமானமும் பெருகியுள்ளது. இதனால் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் ஒரே நாளில் 6 சதவீதம் வரை உயர்ந்தது.

செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் தனது ஒருங்கிணைந்த வருவாயில் 26 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து மும்பை பங்குச்சந்தையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கு விலை உயர்ந்து, அதிகபட்சமாக 581 ரூபாய் என உச்சத்தை தொட்டது.

தங்கம் வியாபாரம் தான் தூள் பறக்குது.. வருமானத்தை அள்ளிய கல்யாண் ஜூவல்லர்ஸ்..!!

கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பிரதான சந்தையான இந்தியாவில் விற்பனை சுமார் 27 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே இயங்கி வரும் கடைகளின் விற்பனைத் திறனைக் குறிக்கும் Same-Store Sales Growth இந்தியாவில் சுமார் 20 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

சர்வதேச அளவில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளின் செயல்பாடுகள் மூலம் சுமார் 12 சதவீத வருவாய் வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சர்வதேச சந்தைகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய், கடந்த காலாண்டின் ஒருங்கிணைந்த வருவாயில் சுமார் 11 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன.

Also Read

நிறுவனத்தின் நிதி நிலையை மேலும் மேம்படுத்தும் வகையில், Gold Metal Loan அல்லாத மற்ற கடன்கள் பூஜ்ஜியம் என குறைந்துள்ளதாக கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நிறுவனத்திற்கு பெரும் நிதி பாதுகாப்பை வழங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்நிறுவனம் குறித்த நம்பிக்கை அதிகமாகியுள்ளது.

செப்டம்பர் 30, 2026 நிலவரப்படி, கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாடுகள் என மொத்தம் 546 ஷோரூம்களை கொண்டுள்ளது. இதில் இந்தியாவில் 365 கல்யாண் ஷோரூம்களும், மத்திய கிழக்கு நாடுகளில் 38, அமெரிக்காவில் 2, இங்கிலாந்தில் 2 மற்றும் 'கேண்டீர்' பிராண்டின் கீழ் 138 ஷோரூம்களும் அடங்கும்.

Recommended For You

இந்தியாவில் இனி வரும் பண்டிகை காலங்களில் தங்கம் விற்பனை அதிகரிக்கும் என்பதல் வர இருக்கும் காலாண்டு முடிவுகளும் நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அண்மையில் தான் இந்நிறுவனம் அக்சயா தங்க மாளிகை என்ற புதிய பிராண்டை தமிழ்நாட்டில் திறந்தது. மேலும் 4 கிளைகளை திறக்க இருப்பதாக காலாண்டு முடிவுகளில் தெரிவித்துள்ளது.கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவன பங்கினை பொறுத்தவரை கடந்த ஓராண்டில் 16%, கடந்த 3 ஆண்டுகளில் 121% வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 11% பங்குகளை வாங்கி வைத்துள்ளனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+