52 வார கால உச்சத்தை தொட்ட கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கு: இன்னும் 47% உயரும் என கணிப்பு..!!

தென்னிந்தியாவின் பிரபல நகை விற்பனை நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் 52 வார கால உச்சத்தை எட்டின. ஒரே நாளில் பங்கு மதிப்பு சுமார் 10 சதவீதம் வரை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

கல்யாண் ஜூவல்லர்ஸ் தனது இரண்டாவது காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 64 சதவீதம் அதிகரித்து, 427 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் பிரதான இந்திய வணிக செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருவாய் 9,007 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 32 சதவீதம் அதிகமாகும்.

52 வார கால உச்சத்தை தொட்ட கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கு: இன்னும் 47% உயரும் என கணிப்பு..!!

நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிதிநிலை மற்றும் வணிக வளர்ச்சி மிகவும் வலுவாக உள்ளதை இந்த காலாண்டு முடிவுகள் காட்டுகின்றன. இந்த நிதி நிலை முடிவுகள் வெளியான உடனே பங்குச்சந்தையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கு மதிப்பு ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்கள் மத்தியில் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகளை வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்தது. இதன் காரணமாக இதன் பங்கு விலை ஒரே நாளில் 10 சதவீதம் வரை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

630 ரூபாயில் வர்த்தகத்தை தொடங்கிய இந்த பங்கு இன்று நண்பகலில் 689 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. இந்நிலையில் சர்வதேச முன்னணி தரகு நிறுவனமான UBS, கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மீது Bullish Outlook-ஐ தந்துள்ளது. தொடர்ந்து இந்த பங்கினை வாங்கலாம் என பரிந்துரையும் வழங்கியுள்ளது.

Also Read

கல்யாண் ஜூவல்லர்ஸின் தொடர் விரிவாக்க நடவடிக்கைகள், வலுவான வருவாய் வளர்ச்சி ஆகியவற்றை குறிப்பிட்டு இதற்காக இலக்கு விலையையும் UBS நிறுவனம் 900 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அதாவது 47% வரை பங்கு விலை உயரும் என கணித்துள்ளது.

போட்டி நிறுவனங்களை காட்டிலும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் கிளைகள் மற்றும் ஷோரூம்களின் விரிவாக்கம் மிக வேகமாக நடைபெற்று வருவதாக UBS தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் வரவிருக்கும் திருமண சீசன் மற்றும் பண்டிகை காலங்களை முன்னிட்டு தங்க விற்பனை மேலும் அதிகரிக்கும் என நிறுவனம் உறுதியாக கூறியுள்ளது.

Recommended For You

கடந்த 5 ஆண்டுகளீல் இந்த பங்கு 720% லாபத்தை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வரும் இந்நிறுவனம், உலகளவில் 500க்கும் அதிகமான ஷோரூம்களை வெற்றிகரமாக இயக்கி வருகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+