தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களாக சரிந்து வருவது மக்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும், முதலீட்டு சந்தைக்கு இது உண்மையில் எதிர்மறையாக அமைந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நகை கடை நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பும் செவ்வாய்கிழமை வர்த்தகத்தில் சுமார் 7 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் 22 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் குறைந்து 13,400 ரூபாயாகவும், 24 கேரட் தங்கம் விலை 175 ரூபாய் குறைந்து 14,618 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல் வெள்ளி விலை எவ்விதமான விலை மாற்றமுமின்றி ஒரு கிராம் 250 ரூபாய், ஒரு கிலோ 2,50,000 ரூபாய் அளவில் உள்ளது.
கல்யாண் ஜூவல்லர்ஸ் காலாண்டு முடிவில் உள்நாட்டு வர்த்தகமும் சரி, வெளிநட்டு வர்த்தகமும் சரி சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என அறிவித்த பின்பும், இந்நிறுவன பங்குகள் 6.78 சதவீதம் வரையில் சரிந்து 355.40 ரூபாயாக குறைந்துள்ளது, நேற்றைய வர்த்தக முடிவில் 381.25 ரூபாயாக இருந்த பங்குகள் இன்று 348.35 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் அதிகப்படியாக இன்றைய வர்த்தகத்தில் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் சுமார் 8.30 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்ட 2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், தனது இந்திய வர்த்தகத்தில் இருந்து சுமார் 38 சதவீதம் அதிக வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் வெளிநாட்டு வர்த்தகத்திலும் 35 சதவீதம் அதிக வருவாய் ஈட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதைவிட முக்கியமாக கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக பிரிவான Candere தளத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 112 சதவீதம் அதிக வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜூன் காலாண்டில் மட்டும் 12 கல்யாண் ஜூவல்லர்ஸ் கடைகளையும், 5 Candere ஷோரூம்-களையும் இந்தியாவில் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கிளை எண்ணிக்கை 524 ஷோரும்-களாக அதிகரித்துள்ளது. உலகளவில் பார்க்கும் போது மத்திய கிழக்கில் 38 கிளைகளும், அமெரிக்காவில் இரண்டும், பிரிட்டனில் 1ம் உள்ளது. மேலும் உலகம் முழுவதும் 129 Candere கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.
தங்கம் விலை உயர்வை ஒப்பிடும் போது, இந்த வருவாய் உயர்வு பெரிய விஷயம் இல்லை என்ற கருத்து முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது. இதேபோல் தங்கம் விலை உயர்வால் மக்கள் தங்க நகை வாங்குவது பெரிய அளவில் குறைந்துள்ளது, இதேபோல் பழைய நகை கொடுத்து புதிய நகை வாங்குவதும் சந்தையில் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகளை பாதிக்க துவங்கியுள்ளது.
இதன் விலை கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கு விலையில் ஏற்பட்ட இன்றைய 8.63 சதவீத சரிவு 2,672 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது. இதேவேளையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் தனது 8 சதவீத சரிவில் இருந்து 5.30 சதவீத சரிவுக்கு குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் 52 வார உயர்வு விலை 617.30 ரூபாய், இதேபோல் குறைந்தப்பட்ச விலை 327.15 ரூபாய்.


Click it and Unblock the Notifications