4 வருஷத்துல 3006% லாபம் தந்த பங்கு! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

வழக்கமாக, பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் நிலையான வளர்ச்சியை அடைவது என்பது கடினமான ஒன்று. ஏனெனில் பல்வேறு சூழல்கள் காரணமாக எப்போது வேண்டுமானாலும் எந்த நாளில் வேண்டுமானாலும் பங்குகளின் விலை ஏறலாம் அல்லது இறக்கம் காணலாம். ஆனால் நீண்ட காலமாக ஒரு பங்கினை வைத்திருப்பவர்களுக்கு அவை நிலையான வருமானத்தை தருகின்றன. அப்படி ஒரு பங்கு குறித்து விரிவாக பார்க்க இருக்கிறோம்.

கெர்னெக்ஸ் மைக்ரோசிஸ்டம்ஸ் (Kernex Microsystems) நிறுவனம் ரயில்வேக்கான பாதுகாப்பு அமைப்புகள், மோதல் தடுப்பு சாதனங்கள் மற்றும் அவற்றுக்கான மென்பொருள் சேவைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

4 வருஷத்துல 3006% லாபம் தந்த பங்கு! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

1999 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் ரயில்வே பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்க தொடங்கியது. கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ரயில்வே பாதுகாப்பு வாரிய உறுப்பினர்களுக்கு ACDக்களின் முன்மாதிரியை வெற்றிகரமாக உருவாக்கி தந்துள்ளது.

ரயில்வே உள்கட்டமைப்பு, ரயில்வே பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை மேம்படுத்த அதிக செலவு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது. அதே போல ரயில்வே நெட்வொர்க்கை நவீனமயமாக்குவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதால் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி வலுவான நிலையில் உள்ளது.

ரூ.20.25 முதல் ரூ.629 வரை உயர்ந்த விலை: இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த 4 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை அள்ளி தந்துள்ளன. அதாவது 4 ஆண்டுகளுக்கு முன்பு 20.25 ரூபாய் என இருந்த பங்கின் விலை தற்போது 629 ரூபாய் என உயர்ந்துள்ளது. கடந்த 1ஆம் தேதி இந்த பங்கின் மதிப்பு 52 வார உச்சமான 718 ரூபாயை தொட்டது.

பங்கு விலை வரலாறு: கடந்த ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு 312 ரூபாய் உயர்ந்துள்ளது. அதாவது 107.66% லாபம் பெற்று தந்துள்ளது. நிறுவனத்தின் சந்தை மூலம் 990 கோடி ரூபாயாக இருக்கிறது. நிறுவனத்தின் சுமார் 70% பங்குகளை சில்லறை முதலீட்டாளர்களே வைத்துள்ளனர், புரமோட்டர்கள் வசம் 29.15% பங்குகள் உள்ளன.

எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பு: இந்த நிறுவனம் கவாச் எனப்படும் ரயில்வே மோதல்களை தடுக்கும் அமைப்பினை உருவாக்கி வருவகிறது. அண்மையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறையில் கவாச் அமைப்புகளை நிறுவ 557 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தார்.

கடந்த மாதம் கெர்னெக்ஸின் இணை நிறுவனம், தெற்கு மத்திய ரயில்வேயிடம் இருந்து 109 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை பெற்றது. தானியங்கி சிக்னல் அமைப்பினை நிறுவுவதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Story written by: Devika Manivannan

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+