மும்பை: கேசர் இந்தியா நிறுவனத்தின் பங்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 3600% லாபத்தை பெற்று தந்துள்ளது. கேசர் இந்தியா நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட போது ஒரு பங்கின் மதிப்பு 174 ரூபாயாக இருந்தது அதுவே தற்போது 906 ரூபாய் என்று அளவில் உயர்ந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் ஸ்மால் கேப் நிறுவனமாக பட்டியலிடப்பட்டிருக்கிறது கேசர் இந்தியா.ஜூன் 12-ம் தேதி பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 906.35 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.

மேலும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு தனது 52 வார கால உச்சத்தை எட்டியது. பின்னர் இதன் மதிப்பு 5 சதவிகிதம் அப்பர் சர்க்யூட் நிலைக்கு லாக் ஆனது.
இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு வெறும் 24 ரூபாய் அதுவே 52 வார கால உச்சபட்ச மதிப்பு 906 ரூபாய். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்மால் கேப் நிறுவனமான கேசர் இந்தியா மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.
அப்போது ஐபிஓ விலையை விட 2.4% அதிகமாக இது வர்த்தகமானது. கேசர் இந்தியா நிறுவனத்தை பொறுத்தவரை கட்டுமான பணி மற்றும் கட்டுமான பணிகளுக்கு தேவையான ஆட்களை வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.
அண்மையில் கூட இந்த நிறுவனம் துபாயில் ஒரு துணை நிறுவனத்தை அமைத்தது. கேசர் இந்தியா நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2,134 கோடி ரூபாய். இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் ஃபேஸ் வேல்யூ 10 , புக் வேல்யூ 11.83. நிறுவனத்தின் வருவாய் 2023 ஆம் ஆண்டில் 15 கோடி ரூபாய், லாபம் 0.78 கோடியாக உள்ளது.
இந்நிறுவன பங்குகளில் 75% புரமோட்டோர்கள் வசமே இருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் 18.62 % பங்குகளை கொண்டுள்ளன. பொதுவாக இது போன்ற ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் முன்பு முதலீட்டாளர்கள் மேற்கூறிய விஷயங்களை கவனிப்பது நல்லது.
தொழில்நுட்ப ஆய்வாளர்களின் கூற்றுப்படி கேசர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை வழக்கமான சர்க்யூட்களுக்குள் செயல்படுகிறது. மேலும் குறைந்த வர்த்தக அளவுகளைக் கொண்டு இருக்கிறது.
பொதுவாக ஒரு வர்த்தகத்தில் ஒரு பங்கின் வர்த்தக அளவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, எனவே அதன் செயல் திறனை நன்றாக இருக்கிறது என்பதால் மட்டுமே பங்கினை வாங்க கூடாது எத்தனை பேர் அதனை வாங்குகின்றனர் என்பதை வர்த்தக அளவுகள் மூலம் தெரிந்து கொள்வது நல்லது.
வர்த்தக அளவினை பார்க்கும் போது இந்த பங்கினை தவிர்ப்பது நல்லது என்ற ஒரு பார்வையையும் நிபுணர்கள் முன் வைக்கிறார்கள். குறிப்பாக இந்த வகையான பங்குகள் வலுவான நபர்களால் நிர்வகிக்கப்படுகின்றன எனவே அதில் வர்த்தகம் செய்வதை தவிர்த்து விடுவது நன்மை என சிலர் கூறுகின்றனர்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications