இந்திய பங்குச் சந்தை சமீபத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருவது அனைவருக்கும் தெரியும், இந்த மோசமான வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான காரணம் மந்தமான உள்நாட்டு பொருளாதாரம், மோசமான நிறுவன லாபங்கள், ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி, அமெரிக்கா-சீனா வர்த்தக போர் அச்சுறுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் கணிசமான வெளியேற்றம் போன்றவை தான்.
எனினும், ஒரு சுவாரஸ்யமான விஷயம் பங்குச்சந்தையில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் மக்கள் தற்போது 2 முக்கியமான விஷயத்தை பற்றி பேசி வருகின்றனர், இதில் ஒன்று பொங்கல் பண்டிகை, மற்றொன்று கும்பமேளா. இந்த நிலையில் கும்பமேளா மற்றும் பங்குச் சந்தை-க்கு மத்தியில் புரியாத ஒரு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

சாம்கோ செக்யூரிட்டீஸ் நடத்திய ஆய்வில் கும்பமேளா மற்றும் பங்குச் சந்தை-க்கு மத்தியில் இருக்கும் வியப்பளிக்கும் தொடர்பை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. கடந்த ஆறு கும்பமேளா காலங்களில் பங்குச் சந்தை பெரும் சரிவை சந்தித்திருப்பது தெரிய வந்துள்ளது.
கும்பமேளா நடக்கும் காலகட்டங்களில் சென்செக்ஸ் குறியீட்டு சராசரியாக 3.42% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 52 நாட்கள் நீடக்கும் இந்த கும்பமேளா காலத்தில் பங்குச் சந்தைக்கு மிகவும் மோசமான வர்த்தக காலமாகவே உள்ளதை பங்குச்சந்தையின் வரலாற்று தரவுகள் காட்டுகிறது.
கடந்த ஆறு கும்பமேளா நடந்த காலத்தில் 6 முறையும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ஐந்து முறை மட்டும் கும்பமேளாவுக்குப் பின்வரும் ஆறு மாதங்களில் பங்குச் சந்தை வலுவான வளர்ச்சியை பதிவு செய்து சராசரியாக 8% லாபத்தை ஈட்டியுள்ளது. சாம்கோ செக்யூரிட்டீஸ், கும்பமேளா காலம் பங்குச் சந்தை திருத்தத்தின் காலமாக செயல்படலாம் என்று கூறுகிறது.
உஜ்ஜைன் கும்பமேளா (2004) 29 நாட்கள் நடைபெற்றது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 5838.02 ஆக இருந்தது, முடிவில் 5647.15 ஆக குறைந்தது (-3.27%). ஆறு மாதங்களுக்குப் பிறகு, சென்செக்ஸ் 5704.1 ஆக உயர்ந்தது (+1.01%).
ஹரித்வார் கும்பமேளா (2010) 104 நாட்கள் நடைபெற்றது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 17584.87 ஆக இருந்தது, முடிவில் 17380.08 ஆக குறைந்தது (-1.16%). ஆறு மாதங்களுக்குப் பிறகு, சென்செக்ஸ் 20303.12 ஆக உயர்ந்தது (+16.82%).
பிரயாக்ராஜ் கும்பமேளா (2013) 56 நாட்கள் நடைபெற்றது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 19906.41 ஆக இருந்தது, முடிவில் 19646.21 ஆக குறைந்தது (-1.31%). ஆறு மாதங்களுக்குப் பிறகு, சென்செக்ஸ் 19997.09 ஆக உயர்ந்தது (+1.79%).
நாசிக்கில் கும்பமேளா (2015) 76 நாட்கள் நடைபெற்றது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 27932.9 ஆக இருந்தது, முடிவில் 25616.84 ஆக குறைந்தது (-8.29%). ஆறு மாதங்களுக்குப் பிறகு, சென்செக்ஸ் 24966.4 ஆக குறைந்தது (-2.54%).
உஜ்ஜைன் கும்பமேளா (2016) 31 நாட்கள் நடைபெற்றது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 25838.14 ஆக இருந்தது, முடிவில் 25230.36 ஆக குறைந்தது (-2.35%). ஆறு மாதங்களுக்குப் பிறகு, சென்செக்ஸ் 25765.14 ஆக உயர்ந்தது (+2.12%).
ஹரித்வார் கும்பமேளா (2021) 18 நாட்கள் நடைபெற்றது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 50029.83 ஆக இருந்தது, முடிவில் 47949.42 ஆக குறைந்தது (-4.16%). ஆறு மாதங்களுக்குப் பிறகு, சென்செக்ஸ் 61765.59 ஆக உயர்ந்தது (+28.81%).
கும்பமேளா விழாவிற்கு இந்தியா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்களை புனித நதியில் நீராடும் வழக்கம் உள்ளது. கும்பமேளா மற்றும் பங்குச் சந்தை இயக்கத்திற்கு இடையே உள்ள தொடர்பு வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றினாலும், சாம்கோ செக்யூரிட்டீஸ் பகுப்பாய்வு சந்தை வியப்பு அளிக்கிறது.
இன்றைய வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் குறியீடு 1048.90 புள்ளிகள் சரிந்து 76,330.01 எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 345.55 புள்ளிகள் சரிந்து 23,085.95 புள்ளிகளை எட்டியுள்ளது.
More From GoodReturns

நாளை பங்குச் சந்தை ஏற்றம் காணுமா? சரியுமா? சந்தையை தீர்மானிக்கப் போகும் 3 முக்கிய காரணிகள்?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications