2025இல் சிறந்த லாபத்தை கொடுத்த பங்குகள் பட்டியலில் என்பிஎஃப்சி நிறுவனமான எல் அண்ட் டி ஃபைனான்ஸ் உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் தடுமாற்றம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. இந்த குழப்பத்திற்கு மத்தியில் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு எல் அண்ட் டி ஃபைனான்ஸ் பங்குகள் இதுவரை 121 சதவீதம் உயர்ந்து இதன் பங்கு விலை ரூ.300 ஆக உள்ளது. கடந்த 11 மாதங்களில் 10 மாதங்கள் உயர்வுடன் முடிந்த சாதனையை எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. நிஃப்டி குறியீட்டில் இந்த ஆண்டு அதிகம் வளர்ச்சி அடைந்த பங்காக எல் அண்ட் டி ஃபைனான்ஸ் திகழ்கிறது.

இதேவேளையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பங்குகள் சுமார் 230 சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. 2012க்குப் பிறகு எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கும், இதன் முதலீட்டாளர்களுக்கும் இது மிகப்பெரிய லாபம் கொடுத்த ஆண்டாக இருக்கும். பங்கு சந்தை ஏற்ற இறக்கம் இருந்த போதும் நவம்பர் வரை உயர்வு தொடர்ந்தது.
இந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை தீவிரமாக பயன்படுத்துகிறது. இதன் மூலம் கடன் செலவை குறைக்க உதவுகிறது எனவும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுதிப்தா ராய் சிஎன்பிசி டிவி18க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். AI மூலம் கடன் ஆபத்தை மதிப்பீடு செய்து செலவுகளை குறைப்பதாக தெரிவித்தார், இது மறைமுகமாக நிறுவனத்தின் லாபத்தை உயர்த்தும்.
இதேவேளையில் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் தங்க கடன் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தங்க கடன் பாதுகாப்பானது, விரைவாக வழங்க முடியும், இதேபோல் கிராமப்புற, நகர்ப்புற வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்க முக்கிய பிரிவாக உள்ளது.

இதேபோல் இந்நிறுவனம் மைக்ரோஃபைனான்ஸ் துறையில் வேகமாக மீண்டு வருவதாக சுதிப்தா ராய் தெரிவித்தார். இந்நிறுவனத்தின் மொத்த கடன் புத்தகத்தில் மைக்ரோஃபைனான்ஸ் பிரிவு மட்டும் 26 சதவீத பங்கீட்டை வகிக்கிறது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவன பங்குகள் 0.32 சதவீதம் உயர்ந்து 300.80 ரூபாய் அளவில் முடிந்துள்ளது. 2026ஆம் ஆண்டிலும் இதேபோன்ற வளர்ச்சியை பதிவு செய்யுமா என்ற கேள்வியும் முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications