லலிதா ஜூவல்லரி: சாதித்து காட்டிய கிரண் குமார்..ஒரே நாளில் 31% லாபம்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி..!!

தமிழ்நாடு, ஆந்திரா உள்பட தென்னிந்திய மாநிலங்களில் பிரபலமாக செயல்பட்டு வரும் தங்க நகை விற்பனை நிறுவனமான லலிதா ஜூவல்லரி மார்ட் (Lalithaa Jewellery Mart) பங்குகள் பங்குச் சந்தையில் அமோகமான லாபத்துடன் காலடி எடுத்து வைத்துள்ளன.

லலிதா ஜூவல்லரி பங்குகளுக்கான ஐபிஓ கடந்த வாரம் வெளியிடப்பட்டது. பலரும் போட்டி போட்டு கொண்டு இந்த பங்குகளை வாங்க விண்ணப்பம் செய்தனர். அந்த வகையில் ஒரு பங்கின் விலை 201 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பங்குச்சந்தையில் லலிதா ஜூவல்லரி பங்குகள் பட்டியலிடப்பட்டன. தேசிய பங்கு சந்தையில் ஒரு பங்கின் 265 ரூபாய் அதாவது ஐபிஓ வெளியீட்டை விட சுமார் 31.84% பிரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டது.

லலிதா ஜூவல்லரி: சாதித்து காட்டிய கிரண் குமார்..ஒரே நாளில் 31% லாபம்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி..!!

பட்டியலிட்ட பிறகு பங்கின் விலை மேலும் உயர்ந்து, அதிகபட்சமாக 274.40 ரூபாய் வரை சென்றது. இது ஐபிஓ விலையை விட 36% வரை லாபமாகும். லலிதா ஜூவல்லரியின் 1,700 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஐபிஓ வெளியீட்டில் 1,200 கோடி வரை புதிய பங்குகளும், நிறுவனரும் தலைவருமான கிரண் குமார் ஜெயின் தன் வசம் இருந்த 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு விற்பனையும் நடந்தது.

இதற்கிடையே பல முன்னணி தரகு நிறுவனங்கள் லலிதா ஜூவல்லரி நிறுவனத்தின் மீது பாசிட்டிவ் பார்வையை தந்திருக்கின்றன. இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 2025 நிதி ஆண்டில் இருந்த 16,907.88 கோடியிலிருந்து, 2026 நிதி ஆண்டில் 25,039.80 கோடியாக அதிரித்துள்ளது. அதேபோல், நிகர லாபம் 364.73 கோடியிலிருந்து 1,009.82 கோடியாக உயர்ந்துள்ளது.

Also Read

தமிழ்நாடு, தெலங்கானா , ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மொத்தம் 61 கிளைகளை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இதில் 45 கடைகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அமைந்துள்ளன, இதுவே நிறுவனத்தின் மொத்த வருவாயில் 60%-க்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் தொகையானது நிறுவனத்தின் கடை விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளது.

ஸ்வாஸ்திகா இன்வெஸ்ட்மார்ட் நிறுவனத்தின் சிவானி நியாதி நிறுவனத்தின் அடிப்படைகள் வலுவாக இருந்தாலும், தங்கத்தின் விலை ஏற்றத்தாழ்வுகள், அதிகப்படியான மூலதனத் தேக்கம் போன்ற சவால்கள் உள்ளன. ஏற்கனவே பங்குகளை வாங்கியவர்கள் நீண்ட காலத்திற்கு பங்கை கையில் வைத்திருக்கலாம் . புதிய முதலீட்டாளர்கள் பங்கின் விலையில் ஒரு நல்ல இறக்கம் வரும் வரை காத்திருப்பது நல்லது என்கிறார்.

Recommended For You

குறைந்த ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் தங்களின் ஆரம்பகால லாபத்தை எடுத்து கொண்டு வெளியே வரலாம் என்றும், நீண்ட கால வளர்ச்சியை நம்புபவர்கள் தொடர்ந்து ஹோல்ட் செய்யலாம் என்றும் கூறுகிறார்.1985ஆம் ஆண்டு சென்னையில் முதல் கடையை திறந்து தற்போது பங்குச்சந்தையில் பட்டியலிடும் அளவுக்கு லலிதா ஜூவல்லரில் வளர்ந்துள்ளது. குறைந்த செய்கூலி சேதாரம் என்ற கான்செப்ட் தான் இந்த கடையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+