இந்திய பங்குச் சந்தைகள் தற்போது தினமும் புதிய உச்சத்தை தொடும் அளவில் உள்ளது. பல நிறுவன பங்குகளின் விலையும் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் எந்த துறையை சேர்ந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும் என்று பலரும் மண்டையை போட்டு குழப்பி கொண்டு இருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டில் எந்த துறைகளை சேர்ந்த பங்குகள் ஏற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து முன்னணி நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். அல்கெமி மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரியான ஹிரேன் வேத் பேட்டி ஒன்றில் கூறியதாவது:

பங்குச் சந்தையில் அடுத்த 2 ஆண்டுகள் லார்ஜ் கேப் ஐ.டி., வங்கி மற்றும் நியூ ஏஜ் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பங்குகளின் காலமாக இருக்கலாம். கடந்த சில ஆண்டுகளாக லார்ஜ் கேப் வங்கிகள் மற்றும் ஐ.டி. பங்குகளின் செயல்திறன் குறைவாக இருந்தது.
பெரிய ஐ.டி. பங்குகளுக்கு செயற்கை நுண்ணறிவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம். நியூ ஏஜ் தொழில்நுட்ப துறையை நிறுவனங்கள் பல லாபத்தை அளிக்க தொடங்கும் என்பதால் அடுத்த ஆண்டில இந்த துறை பங்குகள் ஏற்றம் காணும்.
2024ம் ஆண்டின் மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால் அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியா போன்ற வளரும் சந்தைகளில் முதலீடு செய்வார்கள். அன்னிய முதலீடு வர ஆரம்பித்தவுடன் அவர்கள் வங்கி பங்குகளை வாங்க வேண்டும். ஏனெனில் இது சந்தையின் மிகவும் லிக்விட் பகுதியாகும். எனவே அடுத்த ஆண்டு முதல் அல்லது இரண்டாவது காலாண்டில் வங்கி பங்குகள் செயல்படுவதை நீங்கள் காணலாம்.
ஸ்மால் மற்றும் மிட் கேப்கள் பக்கவாட்டாகச் செல்லலாம் அல்லது அவை ஏற்கனவே நன்றாக ஏறிவிட்டதால் சரிவை சந்திக்கலாம். ஆனால் பெரிய கேப்கள் உயரவில்லை. எனவே நிப்டி நன்றாக செயல்படும் நேரமாகும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால், ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் மீண்டும் நன்றாக செயல்பட ஆரம்பிக்கலாம்.
இந்த காளை (ஏற்றம்) தொடர வேண்டும் என்றால் ஒரு கட்டத்தில் லார்ஜ் கேப் பங்குகள் உயர ஆரம்பிக்க வேண்டும். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்குள் நிப்டி 21,000-22,000ஐ தாண்டினால் நான் ஆச்சரியபட மாட்டேன். 2025 தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ்க்கு இடையில் சென்செக்ஸ் 1,00,000ஐ எட்டும் சாத்தியம் உள்ளது. அடுத்த நிதியாண்டில் ஐ.டி. மற்றும் வங்கி பங்குகள் முன்னணியில் இருக்கலாம் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications