மும்பை: ஒரு நல்ல பங்கு தேர்வாளர் தனது பணத்தை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இரட்டிப்பாக்க முடியும் என ரமேஷ் தமானி கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில் அவர் முதலீடு சார்ந்த பல்வேறு வழிமுறைகளையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
இந்தியாவின் பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரும், அவன்யூ சூப்பர் மார்க்கெட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் ரமேஷ் தமானி. பல ஆண்டுகளாக இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்து வரக்கூடிய இவர் மும்பை பங்குச் சந்தையின் ஒரு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் இவர் 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுதான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு மிகச் சரியான தருணம் என தெரிவித்துள்ளார்.
ஒரு நிறுவனத்தின் மதிப்பு மற்றும் அதன் வளர்ச்சி ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு தான் பங்கினை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் தான் மருந்து நிறுவன பங்குகளை அதிக அளவில் வாங்குவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
குறிப்பாக ஒரு புதிய மருந்தினை நோக்கி இந்திய மருந்து நிறுவனங்கள் ஆய்வினை தீவிரப்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு 2029 ஆம் ஆண்டிற்குள் முழுமையான உரிமம் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு வந்து விடும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை ஆன்டிபயாட்டிக் ஆய்வுத் துறையில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதால், மருந்து நிறுவனங்களில் நாம் செய்ய முதலீடுகள் நமக்கு பெருமளவில் லாபத்தை பெற்று தரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அண்மையில் பங்குச்சந்தையில் தனக்கு கிடைத்த லாபங்கள் அனைத்தையும் மருந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக அவர் கூறுகிறார் .மேலும் எந்த ஒரு பொருள் நேரடியாக வாடிக்கையாளர்கள் கைகளுக்கு சென்று அவர்களால் பயன்படுத்தப்படுகிறதோ அத்தகைய நிறுவனங்களின் பங்குகள் என்றென்றும் லாபத்தை தரக்கூடியவை என தெரிவித்துள்ளார். நீங்கள் உண்மையாகவே ஒரு சிறந்த பங்கு தேர்வாளராக இருந்தால் உங்களது பணம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இரட்டிப்பாகி இருக்க வேண்டும் என்றார்.
இந்தியாவில் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் சென்று சேரக்கூடிய பொருட்களை தயாரிக்க கூடிய நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கக்கூடிய நிறுவனங்கள் அடுத்த சில ஆண்டுகளில் மிகச் சிறந்த வளர்ச்சியை காணும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பலரும் மிட் கேப் நிறுவனங்களின் காலம் முடிந்து விட்டது எனக் கூறுகின்றனர். ஸ்மால் கேப்பில் ரிஸ்க் அதிகம் எனவே லார்ஜ் கேப் நிறுவனங்களை நோக்கி செல்வதாக கூறுகின்றனர். ஆனால் ஒரு பங்கினை தேர்வு செய்யும் போது அது ஸ்மால் கேப், மிட் கேப், லார்ஜ் கேப் என்பதை தாண்டி வேறு சில விஷயங்களையும் கவனிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
ஒரு நிறுவனம் தயாரிக்கும் பொருள் அல்லது அவர்கள் வழங்கும் சேவையின் மதிப்பு என்ன? எதிர்காலத்தில் அதன் தேவை எப்படி இருக்கும்? இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவுமா ? ஆகிய கேள்விகளை அடிப்படையாக கொண்டு பங்குகளை தேர்வு செய்ய வேண்டும் இதை தான் நான் பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறேன் என கூறுகிறார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Devika
More From GoodReturns

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!



Click it and Unblock the Notifications