உள்நாட்டு முதலீட்டாளர்களால் சரிவில் இருந்து தப்பித்த மும்பை பங்குச்சந்தை..!
மந்தமான வர்த்தகத்தில் இருந்த மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உள்நாட்டு முதலீட்டாளர்களால் திடீர் உயர்வை சந்தித்தது. இந்த திடீர் உயர்விற்கு முக்கிய காரணமாக இருந்தது ஐரோப்பிய சந்தையில் சாதகமான வர்த்தக சூழ்நிலை.
இதன் மூலம் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 84.03 புள்ளிகள் உயர்ந்து 31,930.49 புள்ளிகளை அடைந்தது.

நிஃப்டி குறியீடும் மதியம் 2 மணிக்கு மேல் தொடர்ந்து உயர்வில் 33.50 புள்ளிகள் உயர்ந்தது. இதன்மூலம் வர்த்தக முடிவில் 9,917.90 புள்ளிகளை எட்டியது நிஃப்டி குறியீடு.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் கோல் இந்தியா, இன்போசிஸ், மஹிந்திரா, ஒஎன்ஜிசி, டாக்டர் ரெட்டி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications