இந்தியாவின் சிறந்த ஆடம்பர ஹோட்டல்களில் ஒன்று லீலா ஹோட்டல்ஸ். விருந்தோம்பல் துறையில் மிகவும் பிரலபமான லீலா ஹோட்டல்ஸ், ரூ.3,500 கோடி திரட்டும் நோக்கில் புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) மேற்கொள்ள உள்ளது. லீலா ஹோட்டல்ஸின் ஐபிஓ நாளை தொடங்குகிறது. இந்நிறுவன ஐபிஓவில் பங்குகள் வேண்டி விண்ணப்பிதற்கு முன்பு முதலீட்டாளர்கள் முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். அவற்றை பார்ப்போம்.
சொகுசு ஹோட்டல்கள்
ஸ்க்லோஸ் பெங்களூரு நிறுவனம் லீலா பிராண்டின் கீழ் ஆடம்பர ஹோட்டல்களை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறது. இந்நிறுவனம்தான் ஐபிஓவை மேற்கொள்கிறது. ஐபிஓவில் கிடைக்கும் நிதியை அதன் தாய் நிறுவனம் மற்றும் துணை நிறுவனங்களின் கடன்களை அடைக்க முதன்மையாக பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு பகுதி பொதுவான நிறுவன நோக்கங்களுக்காக அந்நிறுவனம் பயன்படுத்த உள்ளதாக தகவல்

பங்கு விலை
லீலா ஹோட்டல்ஸின் புதிய பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் வெளியீட்டு விலை வரம்பு ரூ.413-435ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லரை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 34 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ரூ.14,042 (ஒரு பங்கு ரூ.413 என்ற விலையில்) தேவைப்படும். நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 14 லாட்கள் அல்லது 476 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு அவர்களுக்கு ரூ.2.07 லட்சம் தேவைப்படும். பெரிய நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் குறைந்தது 68 லாட்கள் அல்லது 2,312 பங்குகள் வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு அவர்களுக்கு ரூ.10.05 லட்சம் வேண்டும்.
ஐபிஓ தொடங்குவதற்கு முன், கிரே மார்க்கெட்டில் லீலா ஹோட்டல்ஸ பங்கு ரூ.17 பிரீமியத்தில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இது ஐபிஓ வெற்றிகரமாக முடிவடைந்தபிறகு, பங்குச் சந்தையில் ரூ.452 என்ற விலையில் பட்டியலிடப்படக்கூடிய சாத்தியத்தை குறிக்கிறது. இது ஐபிஓ விலையை காட்டிலும் 3.19 சதவீதம் அதிகமாகும்.
அபாயங்கள்
லீலா ஹோட்டல்ஸ் நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் முதலீட்டாளர்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டிய சில அபாயங்களை கோடிட்டு காட்டுகிறது. அவற்றில் சில: எங்கள் பிராண்டின் தரம் அல்லது நற்பெயரில் ஏற்படும் எந்தவொரு சரிவும் எங்கள் வணிகம், நிதி நிலை மற்றும் செயல்பாடுகளின் முடிவுகளில் பாதகமான விளைவை ஏற்படுத்தும்.
கடந்த காலங்களில் இழப்புகளை சந்தித்துள்ளோம் (2023-24ல் ரூ.2.12 கோடி நஷ்டம், 2022-23ல் ரூ.61.67 கோடி இழப்பு, 2021-22ல் ரூ.319 கோடி நஷ்டம்). எதிர்காலத்திலும் தொடர் இழப்புகளை சந்திக்க நேரிடும். இது எங்கள், பணப்புழக்கங்கள் மற்றும் நிதி நிலையில் பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடும். கடந்த காலங்களில் எங்களுக்கு எதிர்மறையான நிகர பணப்புழக்கங்கள் இருந்தன. மேலும் எதிர்காலத்திலும் தொடரலாம். இது எங்கள் செயல்பாடுகளின் முடிவுகள் மற்றும் நிதிநிலையை மோசமாக பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு அமைதியாக பதிலடி கொடுக்கும் இந்தியா.. அருணாச்சலப் பிரதேசத்தில் சிறப்பு கொண்டாட்டம்..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications