ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய பின்பு மும்பை பங்குச்சந்தை கடுமையான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வந்தாலும் ஒரு சில பங்குகள் எப்படி முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தைக் கொடுத்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷமான டாடா குழுமத்தின் முக்கியமான நிறுவனத்தைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.
டாடா குழுமத்தின் பல பங்குகள் தற்போது அதிகப்படியான லாபத்தை அளித்தாலும் 'இந்த' நிறுவனத்தைப் போல் ஒரு வருடத்தில் 12 மடங்கு லாபத்தை யாரும் கொடுத்தது இல்லை.
டாடா குழுமம்
டாடா குழுமத்தின் பங்குகளாக இருந்தாலும், அதிகம் பிரபலம் இல்லாமல் இருக்கும் நிறுவனம் தான் ஆட்டோமோட்டிவ் ஸ்டாம்பிங்ஸ் அண்ட் அசெம்பிளிஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை பிப்ரவரி 25ஆம் தேதி முதல் மார்ச் 16ஆம் தேதிக்குள் சுமார் 80 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
முதலீட்டாளர்கள்
ஆட்டோமோட்டிவ் ஸ்டாம்பிங்ஸ் அண்ட் அசெம்பிளிஸ் லிமிடெட் பங்குகள் இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு பங்கு விலை 244.40 ரூபாயில் இருந்து 438.40 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் தற்போது முதலீட்டாளர்கள் லாபம் பார்க்க துவங்கியுள்ளதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
1,242.96 சதவீதம் வளர்ச்சி
கடந்த ஒரு வருடத்தில் இந்த டாடா குரூப் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெறும் 34.10 ரூபாயில் இருந்து இன்று 457.95 ரூபாய் வரையில் உயர்ந்து சுமார் 1,242.96 சதவீதம் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தை அளித்துள்ளது.
52 வார உயர்வு
மேலும் ஆட்டோமோட்டிவ் ஸ்டாம்பிங்ஸ் அண்ட் அசெம்பிளிஸ் லிமிடெட் பங்குகள் ஜனவரி 11ஆம் தனது 52 வார உயர்வான 925.45 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த 3 மாதத்தில் இதன் விலை கிட்டதட்ட பாதியாகக் குறைந்துள்ளது.
12.50 லட்சம் ரூபாய்
ஆனால் கடந்த ஆண்டு ஆட்டோமோட்டிவ் ஸ்டாம்பிங்ஸ் அண்ட் அசெம்பிளிஸ் லிமிடெட் பங்குகளில் நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று கிட்டதட்ட 12.50 லட்சம் ரூபாய். Automotive Stampings and Assemblies Ltd நிறுவனம் வாகனங்களுக்கான ஷீட் மெட்டல் காம்போனென்ட், வெல்டெட் அசம்பிளி, மற்றும் ஆட்டோமொபைல் மாடியூல்களைத் தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications