நாட்டின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான காப்பீட்டு நிறுவனம் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி). இந்நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளரும் கூட. எல்ஐசி நிறுவனத்துக்கு பங்குகளில் மேற்கொள்ளும் முதலீடு வாயிலாகவும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. எல்ஐசி நிறுவனம் ஒரு பங்கில் முதலீடு செய்வதற்கு முன் நல்ல ஆய்வு செய்து, நல்ல ஆதாயம் கிடைக்கும் என்று தெரிந்தால் மட்டுமே முதலீடு செய்யும்.
முதலீடு
எல்ஐசி ஒரு பங்கில் முதலீடு செய்கிறது என்றால், அந்த பங்கு நல்ல பங்காக இருக்கும் என்ற நம்பிக்கை சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது. இதனால் எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்த பங்கு உடனே லைம் லைட்டுக்கு வந்து விடும். தற்போது எல்ஐசி நிறுவனம் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியாவில் தனது பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ளது என்ற செய்தி பங்குச் சந்தை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக எல்ஐசி நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த மே 9ம் தேதி நிலவரப்படி, அரசுக்கு சொந்தமான பேங்க் ஆஃப் இந்தியாவில் நிறுவனத்தின் பங்கு மூலதனம் 8.38 சதவீதமாக உள்ளது. 2021 செப்டம்பர் 2ம் தேதி முதல் 2025 மே 9ம் தேதி வரையிலான காலத்தில் கூடுதலாக பேங்க் ஆஃப் இந்தியாவின் 2.06 சதவீத பங்குகளை வாங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
பங்கு விலை
கடந்த நான்கு ஆண்டு காலத்தில் பேங்க் ஆஃப் இந்தியாவில் எல்ஐசி பங்கு மூலதனம் 6.35 சதவீதத்திலிருந்து 8.38 சதவீதமாக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில், பேங்க் ஆஃப் இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.27 சதவீதம் உயர்ந்து ரூ.112.55ல் நிலை கொண்டது.
2025 ஜனவரி 13ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.90.00க்கு சென்றது. ஆனால் அதன் பிறகு இப்ங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது இப்பங்கின் விலை அதன் 52 வார குறைந்தபட்ச விலையை காட்டிலும் 25 சதவீதம் அதிகமாக உள்ளது.
தொடர் சரிவு
மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில், எல்ஐசி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.42 சதவீதம் உயர்ந்து ரூ.826.75ஆக இருந்தது. 2024 ஆகஸ்ட் 1ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,221.50ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 3ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.715.35க்கு சென்றது.
ஸ்வீட் எடு கொண்டாடு.. ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க அதிக வாய்ப்பு.. எப்படி தெரியுமா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications