நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மிகப்பெரிய நிறுவன பங்கு முதலீட்டாளர் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி எல்ஐசி முதலீடு செய்துள்ளது பல நிறுவன பங்குகளில் முத்து முத்தாக 15 நிறுவனங்கள் லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.
ACE Equity அறிக்கையின் படி, எல்ஐசி நிறுவனம் குறைந்தது 260 பங்குகளில் முதலீடு செய்துள்ளது. இந்த பங்குகளில் குறைந்தது 15 பங்குகள் மல்டிபேக்கர் வருமானத்தை எல்ஐசி கண்டுள்ளது. எல்ஐசிக்கு மல்டிபேக்கர் வருமானத்தை கொடுக்கும் இந்த 15 பங்குகளில் பெரும்பாலானவை ஸ்மால் கேப், மிட் கேப் பங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஐசி முதலீடு செய்த பங்குகளில் அதிகம் ஆதாயம் அளிக்கும் பங்குகளில் முதலிடத்தில் இருப்பது சுஸ்லான் எனர்ஜி. இந்நிறுவனத்தில் எல்ஐசி 1.03 சதவீத பங்குகளை வைத்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் சுஸ்லான் எனர்ஜி பங்கு 307 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
அடுத்தது பாலிசெம் பங்கு 174 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. responsive industries பங்கு 150 சதவீதம் உயர்ந்துள்ளது. கோகாக் டெக்ஸ்டைல்ஸ் பங்கு 146 சதவீதம் ஆதாயம் வழங்கியுள்ளது. பிரீமியர் பங்கு 137 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. எச்.எல்.வி. பங்கு 134 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.
ஆர்.வி.என்.எல். பங்கு 130 சதவீதமும், வெல்ஸ்பன் லைவ்விங் 129 சதவீதமும் வருமானம் கொடுத்துள்ளது. ஐ.எஃப்.சி.ஐ. பங்கு 124 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. பி.டி.சி. இந்தியா பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் தி ஜம்மு அண்ட் காஷ்மீர் பேங்க் ஆகியவை முறையே 116 சதவீதம் மற்றும் 110 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
வெல்ஸ்பன் கார்ப் 103 சதவீதம் வருமானம் கொடுத்துள்ளது. டி.சி.எம். ஸ்ரீராம் பங்கு விலை 103 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜி.எம்.ஆர். பவர் மற்றும் அர்பன் இன்ஃப்ரா பங்கு 101 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
2023-24ம் நிதியாண்டில் எல்ஐசியின் போர்ட்போலியாவில் அதானி பங்குகளை தவிர்த்து, வேதாந்தா, எச்.டி.எஃப்.சி. வங்கி, இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதுல் லிமிடெட் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை குறைந்துள்ளது. வேதாந்தா பங்கின் விலை 21 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications