18 மாதங்களாக சத்தமில்லாமல் எல்ஐசி செய்த காரியம்.. வெளியே வந்த பேங்க் ஆஃப் பரோடா விஷயம்..

நாட்டின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான காப்பீட்டு நிறுவனம் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி). இந்நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளரும் கூட. எல்ஐசி நிறுவனத்துக்கு பங்குகளில் மேற்கொள்ளும் முதலீடு வாயிலாகவும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. எல்ஐசி நிறுவனம் ஒரு பங்கில் முதலீடு செய்வதற்கு முன் நல்ல ஆய்வு செய்து, நல்ல ஆதாயம் கிடைக்கும் என்று தெரிந்தால் மட்டுமே முதலீடு செய்யும்.

எனவே எல்ஐசி ஒரு பங்கில் முதலீடு செய்கிறது என்றால், அந்த பங்கு நல்ல பங்காக இருக்கும் என்ற நம்பிக்கை சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்நிலையில் எல்ஐசி நிறுவனம் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில் தனது பங்கு மூலதனத்தை 2 சதவீதமாக அதிகரித்துள்ளது என்ற செய்தி பங்கு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

18 மாதங்களாக சத்தமில்லாமல் எல்ஐசி செய்த காரியம்.. வெளியே வந்த பேங்க் ஆஃப் பரோடா விஷயம்..

இது தொடா்பாக எல்ஐசி நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், அரசுக்கு சொந்தமான பேங்க் ஆஃப் பரோடாவில் நிறுவனத்தின் பங்கு மூலதனத்தை 2 சதவீதம் அதிகரித்து 7.05 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2023 நவம்பர் 20ம் தேதி முதல் 2025 ஏப்ரல் 16ம் தேதி வரையிலான கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வெளிச்சந்தையில் கூடுதலாக 10.45 கோடி பேங்க் ஆஃப் பரோடாவின் பங்குகள் வாங்கப்பட்டது. என்று தெரிவித்துள்ளது.

2023 நவம்பர் 19ம் தேதி நிலவரப்படி பேங்க் ஆஃப் பரோடாவில் எல்ஐசி பங்கு மூலதனம் 5.03 சதவீதமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் பேங்க் ஆஃப் பரோடா பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.86 சதவீதம் உயர்ந்து ரூ.249.65ஆக இருந்தது. 2024 ஜூன் 3ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.298.45ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வந்தது.

மும்பை பங்குச் சந்தையின் தரவுகளின்படி, பேங்க் ஆஃப் பரோடா 2024 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.4,837 கோடி ஈட்டியுள்ளது. அந்த காலாண்டில் அந்த வங்கி வருவாயாக ரூ.30,908 கோடி சம்பாதித்துள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் பேங்க் ஆஃப் பரோடாவின் ஒரு பங்கு வாயிலான வருமானம் ரூ.9.35ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் எல்ஐசி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.75 சதவீதம் உயர்ந்து ரூ.817.65ஆக இருந்தது. எல்ஐசி பங்கின் விலை தற்போது அதன் 52 வார உச்சவிலையை (ரூ.1,221.50) காட்டிலும் சுமார் 33 சதவீதம் குறைவாக உள்ளது.

புதிய சாதனை படைத்த நிஃப்டி பேங்க் இன்டெக்ஸ்.. முதல் முறையாக 55,000 புள்ளிகளை கடந்து சாதனை..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+