புதிய சாதனை படைத்த நிஃப்டி பேங்க் இன்டெக்ஸ்.. முதல் முறையாக 55,000 புள்ளிகளை கடந்து சாதனை..

கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,509 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்ஃடி 414 புள்ளிகளும் உயர்ந்தது. இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக வர்த்தகத்தின் இடையே மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

பங்குச் சந்தைகளின் நிலவரம் தற்போது உற்சாகமாக இருந்தாலும், டிரம்பின வரி விதிப்பால் ஏற்ற சரிவிலிருந்து பங்குச் சந்தைகள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த சூழ்நிலையில், இன்று வங்கித் துறை ஆச்சரியம் அளிக்கும் வகையில் எழுச்சி பெற்றுள்ளது. இன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே நிஃப்டி பேங்க் (வங்கி) இன்டெக்ஸ் முந்தைய சாதனையை முறியடித்து முதல் முறையாக 55,000 புள்ளிகளை கடந்தது.

புதிய சாதனை படைத்த  நிஃப்டி பேங்க் இன்டெக்ஸ்.. முதல் முறையாக 55,000 புள்ளிகளை கடந்து சாதனை..

தனியார் வங்கிகளான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததால், நிஃப்டி வங்கி இன்டெக்ஸ் எழுச்சி கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே எச்டிஎஃப்சி வங்கி பங்கின் விலை சுமார் 2 சதவீதம் உயர்ந்து புதிய 52 வார உச்சமான ரூ.1,950ஐ எட்டியது. பங்கு வர்த்தகத்தின் இடையே ஐசிஐசிஐ வங்கி பங்கின் விலை 2 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து புதிய 52 வார உச்சமான ரூ.1,437ஐ எட்டியது.

ரெலிகேர் புரோக்கிங் நிறுவனத்தின் அஜித் மிஸ்ரா கூறுகையில், இப்போது நிஃப்டி வங்கி 55,000-57,000 மண்டலத்தை நோக்கி செல்கிறது. கடந்த 9 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு ஒரு உறுதியான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. ஒருவேளை 51,900-53,400 பகுதியை நோக்கிய எந்தவொரு சரிவு ஏற்பட்டாலும் அது வலுவான வாங்கும் ஆர்வத்தை ஈர்க்கும் என்று தெரிவித்தார்.

நொமுரா நிறுவனம் கூறுகையில், 2025ம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இந்த ஆண்டுக்குள் மேலும் 0.50 புள்ளிகள் குறைக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நிகர வட்டி லாப வரம்பு குறைவு மற்றும் அதிகரித்து வரும் கடன் செலவுகள் காரணமாக வருவாய் வளர்ச்சியில் மெதுவான காரணிகள் இருந்தாலும், வங்கி அமைப்பின் பணப்புழக்க நிலைகள் மேலும் மேம்படும்.

சிறந்த வைப்புத்தொகை மற்றும் கடன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாராக் கடன் தரம் குறித்த கவலைகள் குறைந்து வருவதாகவும், வங்கிகள் கடன் வழங்க விருப்பம் வலுவடைந்து வருவாதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ்.. குட்நியூஸ் வருமா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+