மும்பை: எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் 2024ஆம் நிதியாண்டில் நல்ல லாபத்தை பெற்றுத்தந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்ஐசி. இது பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அவை அனைத்தும் நல்ல ரிட்டர்ன்ஸ் கொடுத்திருப்பதால் எல்ஐசிக்கு இது லாபமான ஆண்டாக அமைந்துள்ளது.
வழக்கமாக எல்ஐசி முதலீடு செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் லாபம் தருபவையாகவே இருக்கும். எனவே எல்ஐசி நிறுவனத்தின் முதலீட்டு உத்தி எப்போதுமே கவனத்தை ஈர்க்கும். எல்ஐசி நிறுவனம் ஒரு நிறுவனத்தில் முதலீட்டை அதிகரித்தாலும், குறைத்தாலும் அல்லது புதிதாக முதலீடு செய்தாலும் பங்குச்சந்தையில் அது பரவலாக பேசப்படும் விஷயமாக இருக்கும். அந்த வகையில் எல்ஐசி முதலீடு செய்த நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளன என்ற விவரம் வெளிவந்துள்ளது.

எல்ஐசியின் போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகளில் 85 பங்குகள் 100%க்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. குறிப்பாக கோகாக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 427% என உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தில் எல்ஐசி 4.54% பங்குகளை சொந்தமாக வைத்துள்ளது. இந்த நிறுவனம் காட்டன் நூல் மற்றும் துணிகளை உற்பத்தி செய்து வருகிறது.
அடுத்ததாக சஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் கடந்த நிதியாண்டில் மட்டும் 412% வளர்ச்சி அடைந்துள்ளது. இதிலும் எல்ஐசி நிறுவனம் கணிசமான பங்குகளை வைத்துள்ளது. எல்ஐசி பங்கு வைத்துள்ள குஜராத் ஸ்டேட் ஃபைனான்சியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு 333%, ஹவுசிங் & அர்பன் டெவலெப்மெண்ட் கார்ப்பரேஷன் 332%, டிஐஎல் 315%, ஐஎஃப்சிஐ 304%, ரெயில் விகாஸ் நிகாம் 269% மற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் 253% என உயர்வு கண்டுள்ளன.
இதில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தற்போது 250 ரூபாய்க்கு வர்த்தகமான நிலையில், 299 ரூபாய் என உயரும் என்று ஆண்டிக் தரகு நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
அதே போல என்பிசிசி, பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஜம்மு & காஷ்மீர் வங்கி, திலிப் பில்டுகான், ஓராக்கல் ஃபைனான்சியல் சர்வீசஸ் சாஃப்ட்வேர், பஞ்சாப் நேஷ்னல் பேங்க், டிக்சன் டெக்னாலஜிஸ், லூபின், ஆயில் இந்தியா, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றின் பங்குகள் 100%க்கும் அதிகமான வளர்ச்சி கண்டுள்ளன.
அதே போல ஹெச்டிஎஃப்சி ஏசட் மேனேஜ்மெண்ட் கம்பெனி, பிடிசி இந்தியா, அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, டாடா பவர், கேனரா பேங்க், ஹீரோ மோட்டார்கார்ப் மற்றும் ஹெச்பிசிஎல் நிறுவனங்களின் பங்குகளும் கடந்த நிதியாண்டில் 100%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
story written by: Devika
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications