எல்ஐசி புதுசா முதலீடு செய்த 3 நிறுவனங்கள்.. இந்த பங்குகள் உங்ககிட்ட இருக்கா..??

மத்திய அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி). இந்நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளரும் கூட. எல்ஐசி நிறுவனத்துக்கு பங்குகளில் மேற்கொள்ளும் முதலீடு வாயிலாகவும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. எல்ஐசி நிறுவனம் ஒரு பங்கில் முதலீடு செய்வதற்கு முன் நல்ல ஆய்வு செய்து, நல்ல ஆதாயம் கிடைக்கும் என்று தெரிந்தால் மட்டுமே முதலீடு செய்யும்.

நம்பிக்கை
எல்ஐசி ஒரு பங்கில் முதலீடு செய்கிறது என்றால், அந்த பங்கு நல்ல பங்காக இருக்கும் என்ற நம்பிக்கை சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது. இதனால் எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்த பங்கு உடனே லைம் லைட்டுக்கு வந்து விடும். தற்போது எல்ஐசி நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ஐஆர்எஃப்சி, ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் மற்றும் கேபிஐடி ஆகிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளது.

எல்ஐசி புதுசா முதலீடு செய்த 3 நிறுவனங்கள்.. இந்த பங்குகள் உங்ககிட்ட இருக்கா..??

ஐஆர்எஃப்சி
இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐஆர்எஃப்சி) நிறுவனம் ரயில்வே சார்பாக என்ஜின்கள், பயணிகள் பெட்டிகள் மற்றும் வேகன்களை வாங்குவதற்கு நிதி திரட்டுவதும், ரயில்வே திட்டங்களுக்கு நிதியளிப்பதும் இதன முதன்மை பணியாகும். எல்ஐசி நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ஐஆர்எஃப்சி நிறுவனத்தின் 1.05 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.140ஆக இருந்தது.

கடந்த 2024-25ம் நிதியாண்டில் ஐஆர்எஃப்சி நிறுவனத்தின் வட்டி வருவாய் 2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு ரூ.6,570 கோடியாக உள்ளது. அந்த ஆண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 1.4 சதவீதம் மட்டுமே உயர்ந்து ரூ.6,500 கோடியாக உள்ளது. ரயில்வே அமைச்சகம் 2025-26ம் நிதியாண்டுக்கு எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை . அதாவது இந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி சீராக இருக்கும்.

ஜிண்டால் ஸ்டெயின்லெஸ்
ரத்தன் ஜிண்டால் குழுமத்தின் நிறுவனங்களில் ஒன்று ஜிண்டால் ஸ்டெயின்லெஸ். இந்நிறுவனம் உள்நாட்டில் மிகப்பெரிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தியாளர் மற்றும் உலகின் மிகப்பெரிய குரோக் மாங்கனீசு ஸ்டீல் உற்பத்தியாளரும் கூட. கடந்த மார்ச் காலாண்டில் எல்ஐசி நிறுவனம் இந்நிறுவனத்தின் 1.24 சதவீத பங்குகளை வாங்கியது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தக்த்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.657.00 ஆக இருந்தது.

கடந்த 2024-25ம் நிதியாண்டில் ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் நிறுவனத்தின் வருவாய் 2 சதவீதம் உயர்ந்து ரூ.39,300 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் விற்பனை அளவு 9 சதவீதம் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம். இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் 91 சதவீதம் உள்நாட்டிலிருந்தும், 9 சதவீதம் ஏற்றுமதி வாயிலாகவும் கிடைத்துள்ளது. அதிக வட்டி செலவினம் மற்றும் தேய்மானம் காரணமாக இந்நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7 சதவீதம் குறைந்து ரூ.2,500 கோடியாக உள்ளது.

கேபிஐடி டெக்னாலஜிஸ்
வாகன துறையை சேர்ந்த கேபிஐடி டெக்னாலஜிஸ், பொறியியல் மற்றும் மொபிலிட்டி தீர்வுகளில் கவனம் செலுத்தும் ஒரு தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் வாகன துறையில் அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கு தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குகிறது. எல்ஐசி நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் கேபிஐடி டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 1.32 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.1,354.80ஆக இருந்தது.

கடந்த 2024-25ம் நிதியாண்டில் கேபிஐடி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் 20 சதவீதம் அதிகரித்து ரூ.5,800 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 41 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.840 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் பயணிகள் கார்களை தாண்டி வணிக வாகனங்கள், கட்டுமானம் அல்லது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் என தனது வணிகத்தை பன்பமுகப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

ராணுவ வீரர் கட்டியெழுப்பிய ஹோட்டல் சாம்ராஜ்யம்.. மகன்களால் கைவிட்டு போன லீலா ஹோட்டல்ஸ்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+