இந்தியாவின் சிறந்த ஆடம்பர ஹோட்டல்களில் ஒன்று லீலா ஹோட்டல்ஸ். புரூக்ஃபீல்ட் ஸ்க்லோஸ் பெங்களூரு நிறுவனம் லீலா பிராண்டின் கீழ் ஆடம்பர ஹோட்டல்களை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறது. லீலா ஹோட்டல்ஸ் தொடங்கி 40 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், புரூக்ஃபீல்ட் ஸ்க்லோஸ் பெங்களூரு நிறுவனம் ரூ.3,500 கோடி திரட்டும் நோக்கில் லீலா ஹோட்டல்ஸின் ஐபிஓ மேற்கொண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்நிறுவனத்தன் ஐபிஓ தொடங்கியது. 28ம் தேதி (புதன்கிழமை) நிறைவடைகிறது.
மனைவி பெயர்
லீலா ஹோட்டல்ஸ் பெயரின் பின்னணியில் மனைவி மீதான ஒரு ராணுவ வீரரின் காதல் உள்ளது. 1986ல் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கேப்டன் சிபி கிருஷ்ணன் நாயர் சங்கிலித்தொடர் ஹோட்டல் நிறுவனமான லீலா ஹோட்டல்ஸை தொடங்கினார். தனது மனைவி லீலாவின் நினைவாக இந்த சங்கிலித்தொடர் ஹொட்டலுக்கு அவர் பெயரிட்டார். முதலில் மும்பையில் "தி லீலா மும்பை" என்ற பெயரில் அவர் ஹோட்டலை தொடங்கினார்.

ஒரு வெற்றிகரமான தொழிலதிபரான கேப்டன் நாயர் தனது அனுபவத்தை பயன்படுத்தி உலகளவில் ஆடம்பர வசதிகள் மற்றும் சிறந்த இடங்களுக்கு பெயர் பெற்ற ஒரு ஆடம்பர விருந்தோம்பல் சங்கிலியை நிறுவினார். 2014ம் ஆண்டு கேப்டன் நாயரின மரணத்தை தொடர்ந்து, நிறுவனம் தொடர்ச்சியாக இழப்புகளை சந்தித்து வந்தது. ரூ.5,000 கோடி அளவுக்கு கடன் ஏற்பட்டது.
கடன்
நாயரின் மகன்கள் விவேக் மற்றும் தினேஷ் நாயர் ஆகியோர் இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் தொழிலை மீண்டும் வளர்ச்சிக்கு பாதைக்கு திருப்ப முயற்சித்த போதிலும், கடனை திரும்ப செலுத்த முடியாததால் 2018ல் லீலா ஹோட்டல்ஸ் விற்கப்பட்டது. லீலா ஹோட்டல்ஸ் சொத்து கேப்டன் நாயரின் மகன்களின் கைகளுக்கு சென்ற ஐந்து ஆண்டுகளுக்குள், இந்த சொகுசு ஹோட்டலின் பிராண்ட் உள்பட பெரும்பாலான சொத்துக்கள் கனடாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான புரூக்ஃபீல்ட் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துக்கு விற்கப்பட்டன.
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் அருகே உள்ள நிலத்தையும், டெல்லி, உதய்பூர், சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள நிலம் மற்றும் மும்பையில் உள்ள சொத்துக்கான உரிம ஒப்பந்தங்களையும் நிறுவனம் பெற்றது. முழு ஒப்பந்தமும் ரூ.3,950 கோடியாக மதிப்பிடப்பட்டது. இதில் 206 அறைகள் கொண்ட கோவா சொத்தும் அடங்கும். கோவா சொத்து மட்டும் ரூ.721 கோடிக்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு அறையின் விலை சுமார் ரூ.3.5 கோடி.
ஐபிஓ
லீலா ஹொட்டல்ஸின் ஐபிஓ மே 26ம் தேதி தொடங்கியது. நாளை முடிவடைகிறது. இந்நிறுவன ஐபிஓவின் மொத்த அளவு ரூ.3,500 கோடியாகும். இதில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள 5.75 கோடி பங்குகளின் புதிய பங்கு வெளியீடு மற்றும் ரூ.1,000 கோடி மதிப்புள்ள 2.30 கோடி பங்குகளின் ஆஃபர் பார் சேலும் அடங்கும். மே 29ம் தேதியன்று பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். ஜூன் 2ம் தேதி மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பங்குகள் பட்டியலிடப்படும்.
2030ல் தங்கம் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா..? இப்போ எவ்வளவு வாங்க முடியுமோ வாங்கிகோங்க..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications