லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் ஒரு ஸ்மால்கேப் நிறுவனமாகும். இந்நிறுவனம் ஹைட்ரோகார்பன் துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு, எஃகு ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், அணுமின் நிலைய கொதிகலன்கள் மற்றும் ஆயத்த தயாரிப்பு திட்டங்களுக்கான கனரக உபகரணங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது. 50 ரூபாய்க்கும் குறைவான ஒரு மல்டிபேக்கர் பென்னி பங்கு இந்த லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் பங்கு.
கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை ரூ.48.77ஆக இருந்தது. லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் பங்கின் விலை குறைவாக இருந்தாலும், முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் கொடுத்துள்ளது.

கடந்த ஒராண்டில் லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் பங்கு 250 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் பங்கின் விலை 800 சதவீதமும், 3 ஆண்டுகளில் 7000 சதவீதமும் உயர்ந்துள்ளது.
லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகளும் சிறப்பாக உள்ளது. நடப்பு 2023-24ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (செப்டம்பர் காலாண்டு) லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர வருவாய் 311.68 சதவீதமும், செயல்பாட்டு லாபம் 174.95 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் 148.84 சதவீதம் அதிகரித்துள்ளது.
லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த டி.பி. குளோபல் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் டி.பி.ஜி. தயாரிப்புகளை TBNIIGATA Lloyds என்ற பிராண்டின் கீழ் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.


Click it and Unblock the Notifications