இந்த மாதம் இதுவரை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (Foreign Portfolio Investors - FPIs) இந்திய பங்குச் சந்தையிலிருந்து ரூ.22,000 கோடி அளவுக்கு பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணமாக லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்த தெளிவின்மை மற்றும் சீன பங்குச் சந்தையின் சிறப்பான செயல்பாடு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஏப்ரல் மாதம் முழுவதும், இந்திய அரசு Mauritius உடனான வரி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய உள்ளதாக எழுந்த கவலை மற்றும் அமெரிக்க க கடன் பத்திரம் லாப விகிதங்கள் தொடர்ந்து உயர்ந்ததன் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.8,700 கோடிக்கும் மேலான பங்குகளை விற்று வெளியேறி இருந்தனர்.
இதற்கு முன்னதாக, மார்ச் மாதத்தில் ரூ.35,098 கோடியும், பிப்ரவரி மாதத்தில் ரூ.1,539 கோடியும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தனர்.
பொது தேர்தல் துவக்கத்திலிருந்த நிலைப்பாட்டுக்கும், தற்போதைய நிலைப்பாட்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் காரணத்தால் தேர்தல் முடிவுகள் குறித்த தெளிவு கிடைக்கும் போது முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்யக் கூடும்.
தற்போதைய சந்தை நிலவரத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய பங்குச் சந்தை ஏற்றத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளின் பங்கு அதிகமாக இருக்கும். இதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எந்த காரணத்திற்காகவும் தவறவிட மாட்டார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியாவில் பங்குகளை வாங்க அதிகப்படியான வாய்ப்புள்ளது.
உண்மையில், தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே கூட இந்த ஏற்றம் தொடங்கலாம் என்று ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு உத்தி வகுப்பாளர் வி.கே.விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
பங்குச்சந்தை டெபாசிட்டரி தரவுகளின்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதம் (மே 24 வரை) பங்குச் சந்தையிலிருந்து ரூ.22,047 கோடி அளவுக்குப் பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணமாகச் சீன பங்குச் சந்தையின் சிறப்பான செயல்பாடு விளங்குகிறது. நீண்ட காலத்திற்கு பின்பு சீன பங்குச்சந்தையில் பதிவான ஏற்றம் இந்திய சந்தையில் அதிக அளவிலான விற்பனையை ஏற்படுத்தியுள்ளது.
சீன பங்குகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஹாங் செங் இண்டெக்ஸ், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீன பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய அதிகப்படியான கட்டுப்பாடுகள் இருக்கும் வேளையில், ஹாங்காங் சந்தை வழியாக முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில் ஹாங் செங் இண்டெக்ஸ் கடந்த மாதத்தில் 7.66 சதவீதம் உயர்ந்தது.
இதேவேளையில் அமெரிக்க மத்திய வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்துவதில் தெளிவான முடிவுகளை எடுக்காமல் இருக்கும் காரணத்தாலும், பங்குச்சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தேர்தல் காரணமாக புதிய முதலீடுகள் அனைத்தும் சீன சந்தையின் பக்கம் திரும்பியிருக்கலாம்.


Click it and Unblock the Notifications