மும்பை: இந்தியாவில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் துறையாக இருக்கிறது. அந்த வகையில் ஆடை உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் கடந்த ஓராண்டு காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 366% லாபம் ஈட்டி தந்துள்ளது.
லாரென்ஸி அப்பேரல்ஸ்: டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய ஆடை தயாரிப்பு நிறுவனம் இது. 2007ஆம் ஆண்டு சந்தீப் ஜெயின் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ஒரு ஸ்மால் கேப் நிறுவனம் ஆகும். ஆடை உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் விற்பனை, ஆயத்த ஆடைகள் விற்பனை என படிப்படியாக வணிகத்தை விரிவுபடுத்தியுள்ள நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பெருமளவில் லாபம் பெற்று மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

லாரென்ஸி அப்பேரல்ஸ் நிறுவனம் ஓராண்டு காலத்தில் 366% லாபத்தை தந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த நிறுவனம் பங்குகளை 10:1 என்ற விதத்தில் பிரிப்பதாகவும் 6:11 என்ற விகிதத்தில் போனஸ் அளிப்பதாகவும் கூடுதல் அறிவிப்பை வெளியிட்டு முதலீட்டாளர்களை கொண்டாட வைத்துள்ளது.
இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் தங்கள் நிறுவன பங்குகளை 10:1 என்ற அளவில் பிரிப்பதாக அறிவித்துள்ளது. அதாவது ரூ.10 முக மதிப்பு கொண்ட ஒரு பங்கானது ரூ.1 முக மதிப்பு கொண்டு ஒவ்வொரு பங்குகளாக பிரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு பங்கானது 10 பங்குகளாக பிரிக்கப்பட உள்ளது.
இது மார்ச் 28ஆம் முன்தேதியிட்டு பிரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் ஸ்டாக் ஸ்ப்ளிட் எனப்படும் பங்குகள் பிரிப்பை அறிவிக்கும் போது நிறுவனத்தின் பங்குகளின் எண்ணிக்கையானது அதிகரிக்கும் ஆனால் நிறுவனத்தின் சந்தை மூலைதனம் அதே அளவில் தான் இருக்கும். தற்போது பங்குகளின் எண்ணிக்கை உயர்வதால் நிறுவனத்தின் பங்கின் மதிப்பு குறையும்.
தகுதி வாய்ந்த பங்குதாரர்களுக்கு 6:11 என்ற அளவில் போனஸ் பங்குகளையும் அறிவித்துள்ளது. அதாவது தகுதி வாய்ந்த ஒவ்வொரு முதலீட்டாளரும் தாங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 11 பங்குகளுக்கும் 6 பங்குகளை போனஸாக பெறுவார்கள். இதுவும் மார்ச் 28ஆம் தேதிக்கு முன் தேதியிட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாரென்ஸி அப்பேரல்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.430.65 கோடி ஆகும். கடந்த இரண்டு வாரத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு 0.19% லாபத்தை தந்துள்ளது. அதேபோல கடந்த கடந்த ஆறு மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 82.30 % உயர்ந்துள்ளது. ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 366.76% அதிகரித்துள்ளது.
கடந்த 52 வார காலத்தில் நிறுவனத்தின் குறைந்தபட்ச பங்கு மதிப்பு ரூ.85 , அதிகபட்ச மதிப்பு ரூ.508 ஆக உள்ளது. கடந்த டிசம்பர் உடன் முடிந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர விற்பனை மதிப்பு ரூ.12.68 கோடியாக இருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 4.26% அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் லாபம் ஓராண்டு காலத்திற்குள் ரூ.2.37 கோடி என உயர்ந்துள்ளது.
Story written by: devika
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications